
ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒவ்வொரு ராசிக்காரர்களும் தனித்துவமான பண்புகளையும், ஆளுமைகளையும் கொண்டுள்ளனர். சிலர் தங்கள் வாழ்க்கை பற்றிய அனைத்து விஷயங்களையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் சிலரோ தங்கள் தனிப்பட்ட விஷயங்களை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இவர்கள் தங்கள் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கிறார்கள். இந்த கட்டுரையில் தங்கள் வாழ்க்கையின் ரகசியங்களை மறைத்து வைப்பதில் வல்லவர்களாக இருக்கும் நான்கு ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே மர்மமானவர்கள். தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்கள் முன்பு இவர்கள் எளிதில் வெளிப்படுத்துவதில்லை. தங்கள் வாழ்க்கையைப் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருப்பதில் முதலிடம் வகிக்கின்றனர். ஒருவரை முழுமையாக நம்பாவிட்டால் அவர்களுடன் தங்கள் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினம். இவர்களுடன் எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் அவர்களின் ஆழமான எண்ணங்களையோ, அல்லது முழு ரகசியங்களையோ முழுமையாக அறிந்து கொள்வது அரிது. இவர்களின் இந்த பண்பு அவர்களை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க செய்கிறது.
மகர ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பிறருடன் பேசுவதை தவிர்க்கிறார்கள். இவர்கள் தங்கள் இலக்குகளையும், திட்டங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் எச்சரிக்கையாக இருப்பார்கள். வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை பிறரிடம் பேசுவது என்பது தங்ளின் முழு பாதுகாப்பை இழப்பது போன்றது என்ற எண்ணம் கொண்டுள்ளனர். இவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட தங்கள் செயல்களால் வெற்றிகளை பறைசாற்ற விரும்புகின்றனர். இவர்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். தங்கள் வாழ்க்கையை குறிப்பிட்ட திசையில் கொண்டு செல்ல விரும்புகிறார்கள். தங்கள் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்காக ரகசியவாதிகளாக உள்ளனர்.
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை பற்றி மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதை தவிக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட உணர்ச்சிகளையோ அல்லது பிரச்சனைகளையோ வெளியில் பேச விரும்புவதில்லை. தங்களின் ரகசியங்களை உலகிற்கு வெளிப்படுத்துவது அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம். தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்க்க விரும்புகிறார்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு முன்பு மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுவதற்கு முன்னர் அந்த நபர் நம்பகமானவரா என்பதை உறுதி செய்து கொள்கிறார்கள். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் மர்மமாகவே இருக்கும்.
மீன ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளையும், கனவுகளையும் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஆழமான எண்ணங்கள் மற்றும் கற்பனைத்திறன் மிக்கவர்கள். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு தயக்கம் காட்டுவார்கள். தங்கள் கனவுலகில் மூழ்கி, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பார்கள். இவர்கள் பிறரின் ரகசியங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தங்கள் சொந்த பிரச்சினைகள் அல்லது ரகசியங்களை வெளியில் கூறுவதற்கு தயங்குவார்கள். இவர்கள் மர்மமானவர்களாகவும், புரிந்து கொள்வதற்கு கடினமானவர்களாகவும் இருக்கிறார்கள். தங்கள் ரகசியங்களை நேரடியாக பகிர்ந்து கொள்வதில் இவர்களுக்கு ஆர்வம் கிடையாது.
மேற்கூறிய ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைத்திருப்பதில் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளனர். தங்கள் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் எச்சரிக்கையாக இருக்கின்றனர். இந்த பண்பு அவர்களை சுவாரஸ்யமானவர்களாகவும், மர்மமானவர்களாகவும் மாற்றுகிறது. இவர்களின் நம்பிக்கையை பெறுவது என்பது எளிதல்ல. இந்த ராசிக்காரர்களுடன் நெருக்கமாக இருக்க விரும்பினால், அவர்களின் ரகசியங்களை அறிந்து கொள்ள விரும்பினால் அவர்களின் தனிப்பட்ட எல்லைகளை மதித்து, பொறுமையாக இருந்து, அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)