
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் உள்ளன. சில ராசிகள் மென்மையான இயல்பு, அன்பு, அமைதி, ஆகியவற்றால் அறியப்படுகின்றன. ஆனால் சில ராசிக்காரர்கள் துணிச்சல், உறுதி மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தால் பிரகாசிக்கின்றன. இந்த கட்டுரையில் சிங்கத்தைப் போல துணிச்சலான தைரியம் கொண்ட பெண்கள் பிறக்கும் நான்கு ராசிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த ராசிகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதையும் கண்டு அஞ்சாமல், தைரியத்துடன் சவால்களை எதிர்கொள்பவர்களாகத் திகழ்கின்றனர்.
மேஷ ராசிப் பெண்கள் தைரியத்திற்கும், முன்னோடி மனப்பான்மைக்கும் பெயர் பெற்றவர்கள். மேஷ ராசியானது செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. செவ்வாய் கிரகமானது ஆற்றல் மற்றும் உறுதியின் உருவமாக திகழ்கிறது. மேஷ ராசிப் பெண்கள் பயத்தை எதிர்கொள்ளும் பொழுது ஒரு படி முன்னேறி, சவால்களை தலைமையேற்று, அதை எதிர்கொள்வார்கள். அவர்களின் துணிச்சல் புதிய பாதைகளை உருவாக்குவதிலும், மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதிலும் வெளிப்படுகிறது. இவர்கள் தோல்வி என்ற பயத்தை பொருட்படுத்துவதே இல்லை.
தங்கள் இலக்குகளை அடைய எந்த ஒரு தடையையும் தகர்க்க தயாராக இருக்கிறார்கள். தங்கள் கருத்துக்களை உறுதியாக வெளிப்படுத்துவார்கள். எந்த சமூக அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டார்கள். தங்கள் குடும்பத்திற்க்கோ அல்லது நண்பர்களுக்கோ ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் இவர்கள் போராட தயங்குவதில்லை.
விருச்சிக ராசிப் பெண்கள் மன உறுதி மற்றும் ஆழமான உணர்ச்சி வலிமையால் அறியப்படுகிறார்கள். இவர்கள் புளூட்டோ மற்றும் செவ்வாய் கிரகங்களால் ஆளப்படுகின்றனர். தீவிரமான ஆற்றலையும், சவால்களையும் எதிர்கொள்ளும் தன்மையையும் விருச்சிக ராசிப் பெண்கள் கொண்டுள்ளனர். இந்த பெண்கள் துணிச்சலை வெளிப்படையாக காட்டாமல் உள்ளார்ந்த வலிமையுடன் செயல்படுவார்கள். அவர்களின் துணிச்சல் உணர்ச்சி ஆழத்துடன் இணைந்து இருக்கிறது. கடினமான சூழல்களில் கூட தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி தெளிவான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்கள்.
இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய எந்த ஒரு தடையையும் தாண்டுவதற்கு தயாராக இருப்பார்கள். அவர்களின் வலிமையான உள்ளுணர்வு மற்றும் மன உறுதி அவர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் வெற்றி பெற வைக்கிறது. மற்றவர்கள் தயங்கும் இடத்தில் கூட விருச்சிக ராசிப் பெண்கள் தைரியமாக முன்னேறி வெற்றிக் கொடியை நாட்டுவார்கள்.
சிம்ம ராசிப் பெண்கள் இயற்கையாகவே தலைமைப் பண்புகளையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். சூரியனால் ஆளப்படும் இந்த ராசி ஆளுமை மற்றும் தைரியமான இயல்பால் அறியப்படுகிறது. சிம்ம ராசிப் பெண்கள் தங்கள் துணிச்சலை வெளிப்படையாகவும், பெருமையுடனும் காட்டுவார்கள். இது மற்றவர்களுக்கு உத்வேகமாக அமைகிறது. இவர்கள் தங்கள் தைரியத்தை பயமில்லாமல் வெளிப்படுத்துவார்கள். எந்த காரியமானாலும் தன்னைச் சுற்றியே அனைத்தும் நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இது அவர்களின் தீவிர தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
தங்கள் குடும்பத்திற்காகவோ நண்பர்களுக்காகவோ அல்லது தாங்கள் நம்பும் விஷயங்களுக்காகவோ எப்போதும் முன் நின்று போராடுவார்கள். அவர்களின் தலைமைப் பண்பு சவால்களை அவர்கள் எதிர்கொள்ளும் பொழுது அவர்களை ஒரு சிங்கம் போல தோற்றமளிக்கச் செய்கிறது.
தனுசு ராசிப் பெண்கள் சுதந்திரத்தையும், சாகசத்தையும் விரும்புபவர்கள். குருபகவானால் ஆளப்படும் இந்த ராசி, ஆர்வம் மற்றும் தைரியத்தின் கலவையாக விளங்குகிறது. இந்த ராசியில் பிறந்த பெண்கள் புதிய அனுபவங்களை தேடுவதிலும், அபாயங்களை எதிர்கொள்வதற்கும் தயங்குவதில்லை. இந்த பெண்களின் துணிச்சல் என்பது அவர்களின் சுதந்திர மனப்பான்மையில் வெளிப்படுகிறது. பயணங்கள், புதிய கலாச்சாரங்கள், புதிய யோசனைகளை ஆராய்வதற்கு இவர்கள் பயப்படுவதில்லை. உதாரணமாக தனுசு ராசியைச் சேர்ந்த ஒரு பெண் தனியாக உலகப்பயணம் செய்யக் கூட முடிவெடுக்கலாம்.
இது அவர்களின் தைரியத்தையும் ஆர்வத்தையும் காட்டுகிறது. இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய எந்த ஒரு அபாயத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். அவர்களின் நம்பிக்கையும், நேர்மையும், சவால்களை எதிர்கொள்ளும் திறனும் அவர்களை உண்மையான சிங்கப் பெண்களாக மாற்றுகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட ராசியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் தனித்துவமான வழிகளில் துணிச்சலைக் காட்டுகிறார்கள். மேஷ ராசிப் பெண்கள் தங்களது உறுதியாலும், விருச்சிக ராசிப் பெண்கள் உள்ளார்ந்த வலிமையாலும், சிம்ம ராசிப் பெண்கள் தலைமைப் பண்புகளாலும், தனுசு ராசிப் பெண்கள் சுதந்திர மனப்பான்மையாலும் சிங்கத்தைப் போல தைரியமாக விளங்குகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் விதமும் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் திறனும் அவர்களை உண்மையிலேயே தனித்துவமானவர்களாகவும், சிங்கப் பெண்களாகவும் மாற்றுகிறது.