
பல கிரகங்கள் பெயர்ச்சி அடைய இருப்பதால் அக்டோபர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் கிரகங்களின் நிலைகளால் நவபஞ்சம், மாளவ்யம், ருச்சகம் போன்ற ராஜயோகங்கள் உருவாக உள்ளன.
அக்டோபர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சனி மீன ராசியில் வக்ரமாக இருப்பார். இதன் விளைவாக கும்ப ராசிக்காரர்கள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெற உள்ளனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் செல்வம் அதிகரிக்கும். வங்கியில் தூங்கிக் கொண்டிருக்கும் அடகு வைத்த நகைகள் மீட்கப்படும்.
தொழில் மீதான நம்பிக்கை விரைவாக அதிகரிக்கும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சமூகத்தில் மரியாதையை அதிகரிக்கும்.
மேஷ ராசியினருக்கு அக்டோபர் மாதம் நல்ல மாதமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து காதல் கைகூடும். உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் உங்கள் துணை அல்லது குடும்பத்தினருடன் நீண்ட தூரம் பயணம் செய்வீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கும். உங்கள் பேச்சாற்றல் அதிகரிக்கும். இதன் காரணமாக தொழிலில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். இதனால் லாபம் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படுவதால், உங்கள் நீண்ட நாள் கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உடல்நலத்திலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை கொண்டு வரும். நிறைவடையாமல் இழுத்தடித்து வந்த வேலைகள், ஒவ்வொன்றாக நிறைவடையும். விரைவில் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் குறிப்பிடத் தகுந்த லாபத்தை ஈட்டுவீர்கள்.
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஐந்து கிரகங்களின் மாற்றமானது பல வழிகளில் நன்மைகளை வழங்க உள்ளது. அனைத்து கிரகங்களின் ஆசிகளும் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கி இருந்த பணம், பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளும் முடிவுக்கு வரக்கூடும். நீண்ட காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இருக்கும். உறவுகள் இணக்கமாக இருக்கும் வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சி பூர்வமான தொடர்பை ஏற்படுத்தி வாழ்க்கையை தொடர்ந்து எடுத்துச் செல்வீர்கள்.
அக்டோபர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் மன நிறைவை கொண்டு வரும்.
பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். சமூகத்தில் உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் நீங்கி கௌரவத்தைப் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் சுப செய்திகள் வந்து சேரலாம்.