தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகம் அனைத்து துறைகளிலும் நன்மையை வழங்கும். தனுசு ராசியின் பத்தாவது வீட்டில் சூரியன் இருக்கிறார். பத்தாவது வீடானது கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது தொழில், வேலை, சமூக அந்தஸ்து, நற்பெயர், அதிகாரம் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே தனுசு ராசிக்காரர்கள் தொழில் சார்ந்த துறைகளில் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.
வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய உத்திகள் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உங்கள் நிதி நிலைமை வலுவடையும். தொழில் போட்டியாளர்களைப் பின்னுக்கு தள்ளி முன்னேறிச் செல்வீர்கள். வசதிகள், ஆடம்பரங்கள் அதிகரிக்கும். பொன், பொருள், நகை, வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம் உண்டு.