Astrology: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஞ்சத்தனமா இருப்பாங்களாம்.! ஒரு ரூபாயை கூட யோசிச்சு செலவு பண்ணுவாங்களாம்.!

Published : Nov 25, 2025, 11:46 AM IST

Stingy Zodiac signs: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கஞ்சத்தனத்துடன் இருப்பார்களாம். அந்த ராசிக்கார்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
பண விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டும் ராசிகள்

பணத்தை நிர்வகிப்பதில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான அணுகுமுறை இருக்கும். சிலர் பணத்தை தண்ணீர் போல தாராளமாக செலவு செய்வார்கள். சிலர் ஒரு ரூபாயாக இருந்தாலும் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையுடன் பார்த்து பார்த்து செலவழிப்பார்கள். இந்த அணுகுமுறை ‘கஞ்சத்தனம்’ என்று பிறரால் பார்க்கப்படுகிறது. ஜோதிடத்தின்படி பண விஷயங்களில் அதிக சிக்கனமாகவும் அல்லது கஞ்சத்தனத்துடன் நடந்து கொள்ளும் ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
1.ரிஷபம்

சுக்கிரன பகவானால் ஆளப்படும் ரிஷப ராசியினர் வசதி, ஆடம்பரம் மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்புவர்கள். அவர்கள் பணத்தை பாதுகாப்பனதாக கருதுகிறார்கள், அதை தவறான வழியில் பயன்படுத்த மாட்டார்கள். தங்களுக்கு பிடித்தமான அல்லது தேவைப்படும் பொருட்களுக்காக தாராளமாக செலவு செய்வார்கள். 

பிறர் செலவுகளுக்கு உதவுவது அல்லது பில்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற விஷயங்களுக்கு அதிகம் யோசிப்பார்கள். தங்களுக்கு சொந்தமான விஷ்யங்களுக்கு தாராளம் காட்டும் இவர்கள், பிறருக்காக செலவழிக்கும் போது அதிக கவனத்துடன் இருப்பார்கள்.

ஒரு குழுவாக எங்காவது சென்றால் முதல் ஆளாக பணத்தை எடுத்து நீட்ட மாட்டார்கள். பணத்தை வெளியே எடுப்பதில் மிகவும் யோசித்து, எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள்.

35
2. கன்னி

கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் மிகவும் நுண்ணறிவு கொண்டவர்கள் மற்றும் விவரங்களில் கவனம் செலுத்துபவர்கள். இவர்களின் இந்த குணமானது பண நிர்வாகத்திலும் பிரதிபலிக்கிறது. 

இவர்கள் மிகவும் துல்லியமான மிகச்சரியாக வரையறுக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தைக் கொண்டுள்ளனர். தங்கள் வங்கிக் கணக்கில் என்ன நடக்கிறது என்பதை எப்போதும் தெரிந்து வைத்திருப்பார்கள். தாங்கள் செய்யும் ஒவ்வொரு செலவையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். அனாவசியமான செலவுகளை தவிர்த்து விடுவார்கள். 

பொருட்களானாலும் சரி, உணவானாலும் சரி தேவைக்கேற்ப மட்டுமே வாங்கி செலவு செய்வார்கள். அனைத்து விஷயத்திலும் சிக்கனத்தை கடைபிடிப்பார்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதில் அவர்கள் காட்டும் அதிகப்படியான ஆர்வம் அவர்களை கஞ்சத்தனம் மிக்கவர்களாக காட்டுகிறது.

45
3. விருச்சிகம்

செவ்வாய் பகவான் ஆளப்படும் விருச்சக ராசிக்காரர்கள் ரகசியமானவர்கள் வியூகம் வகுப்பதில் வல்லவர்கள். இவர்களின் பண அணுகுமுறை என்பது மறைமுகமானது மற்றும் கட்டுப்பாடு மிக்கது. இவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? எவ்வளவு சேமிக்கிறார்கள்? என்பதைப் பற்றி யாரிடமும் பேசமாட்டார்கள். 

நிதி சார்ந்த விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவார்கள். ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு செலவு செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு நிதி நகர்வையும் திட்டமிட்டு, நிதி நிலைமையின் மீது முழு கட்டுப்பாட்டு கொண்டிருக்க விரும்புவார்கள். 

இவர்களின் கஞ்சத்தனம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், அனாவசிய செலவுகளை தவிர்ப்பதற்காக பயணங்கள் மற்றும் விருந்துகளை தவிர்ப்பார்கள். இவர்களின் இந்த கட்டுப்பாடுமிக்க குணமானது அவர்களை ‘கஞ்சத்தனமானவர்’ என்று எண்ண வைக்கலாம்.

55
4. மகரம்

மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பவர்கள். இவர்கள் இயல்பாகவே ஒழுக்கம், கடின உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள். இவர்களின் நிதி அணுகுமுறை மிகவும் தீவிரமானது. நீண்ட கால ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. 

தங்கள் எதிர்காலத்திற்கு என்ன தேவை என்பதை திட்டமிட்டு, அனாவசியமான செலவுகளை தவிர்த்து, ஒவ்வொரு ரூபாயும் சேமித்து புத்திசாலித்தனமான முதலீடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு பெரிய செலவு செய்வதற்கு முன்னர் அதன் நன்மை, தீமைகளை முழுமையாக ஆராய்வார்கள். 

தன்னிச்சையான அல்லது ஆடம்பர செலவுகளை அவர்கள் முற்றிலும் வெறுக்கிறார்கள். இவர்களின் தீவிர சேமிப்புப் பழக்கம் சிலருக்கு கஞ்சத்தனமாக தோன்றலாம். அவர்கள் நீண்ட கால நிதி இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பதால் சிறிய இன்பங்களுக்காக அவர்கள் செலவு செய்வதில்லை.


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories