சீக்கிரமே காதலில் விழுந்து, அதில் உண்மையாகவும், உறுதியாகவும் இருந்தாலும் சிலருக்கு அவர்களின் ராசி குணத்தை காட்ட துவங்கி விடும். தங்களின் ராசிக்குரிய குணம் வெளிப்படும் போது அந்த காதல் தோல்வியை சசந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
காதல் என்பது அனைவருக்கும் எளிதாக கைகூடி விடுவதில்லை. சிலருக்கு முதல் பார்வையிலேயே காதல் கைகூடும்; சிலருக்கோ பலமுறை முயன்றாலும் ஏமாற்றமே மிஞ்சும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் மற்றும் ஐந்தாம் அதிபதியின் பலவீனமான நிலைகள் காதலில் தடைகளையும் தோல்விகளையும் ஏற்படுத்துகின்றன. அளவுக்கு மீறிய பாசம் அல்லது அதீத எதிர்பார்ப்பு காரணமாக அடிக்கடி காதல் தோல்விகளைச் சந்திக்கும் அந்த துரதிர்ஷ்டசாலி ராசிகள் எவை, அவர்கள் இதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
26
1. மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் காதலில் விழுவதில் காட்டும் அவசரத்தை, அதைத் தக்க வைப்பதில் காட்டுவதில்லை. முதல் பார்வையிலேயே தீவிரமாக காதலிப்பார்கள். ஆனால், இவர்களின் ஆதிக்க குணமும், முன்கோபமும் இணையை இவர்களை விட்டு தூர விலகச் செய்துவிடும். காதலில் பொறுமை மிக அவசியம். முடிவுகளை எடுப்பதற்கு முன் இணையின் கருத்திற்கும் மதிப்பளிக்கப் பழகுங்கள்.
36
2. மிதுனம்:
புதனின் ஆதிக்கம் பெற்ற மிதுன ராசிக்காரர்களுக்கு காதலில் சீக்கிரம் சலிப்பு தட்டிவிடும். ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல், இவர்களின் இரட்டை மனநிலை இணையை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த நிலையற்ற தன்மையே இவர்களது காதல் முறிவுக்கு முக்கிய காரணமாகிறது. காதலில் ஆழமும் அர்ப்பணிப்பும் தேவை. புதிய தேடல்களை இணையின் மீது திணிக்காமல், உறவில் நிலைத்தன்மையைக் கடைப்பிடியுங்கள்.
சந்திரனின் ஆதிக்கம் கொண்ட கடக ராசிக்காரர்கள் காதலில் அளவுக்கு அதிகமாக உருகிப் பாசம் காட்டுவார்கள். ஆனால், அதே அளவு இவர்களிடம் பொசசிவ்னஸ் (Possessiveness) மற்றும் சந்தேகம் தலைதூக்கும் போது, அதுவே இணையை மூச்சுத்திணறச் செய்து காதலை முறிக்க வழிவகுக்கும். இணையின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளியுங்கள். அளவுக்கு மிஞ்சிய பாசம் சில நேரங்களில் சுமையாக மாறும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
56
4. விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களின் காதல் மிகவும் தீவிரமானது, ஆனால் அதே அளவு ரகசியத் தன்மையும் கொண்டது. சிறு கருத்து வேறுபாட்டைக் கூட இவர்களால் தாங்க முடியாது. ஏமாற்றத்தை சந்திக்கும் போது உடனே பழிவாங்கும் உணர்ச்சி மேலோங்குவதால் இவர்களது காதல் நிரந்தரமாக முறிந்து விடுகிறது. கடந்த கால கசப்புகளை மறந்து மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். விட்டுக்கொடுத்தலே காதலின் பலம்.
66
5. மீனம்:
மீன ராசிக்காரர்கள் காதலை ஒரு சினிமா போல் கற்பனை உலகிலேயே வாழ்பவர்கள். நிஜ வாழ்க்கையின் எதார்த்தங்களை எதிர்கொள்ளும் போது, இவர்களின் கற்பனை உடைந்து போகிறது. துணையை அளவுக்கு அதிகமாக நம்பி, இறுதியில் ஏமாற்றத்தையே பரிசாகப் பெறுகிறார்கள். காதலை எதார்த்தக் கண்ணோட்டத்துடன் அணுகுங்கள். கண்மூடித்தனமான நம்பிக்கையைத் தவிர்த்து, நடைமுறை வாழ்க்கைக்கு உங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.