தனுசு ராசி பெண்கள் தங்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கொண்டு வருவார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. அவர்கள் குடும்பத்திற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், கணவரின் தொழில் மற்றும் நிதி நிலையையும் மேம்படுத்துகிறார்கள்.
ஒருவரது ஜாதகம் அவர்களது கணவருக்கோ அல்லது அவருக்கு மனைவிக்கோ கண்டிப்பாக அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். ஒரு பெண்ணின் ராசி திருமணத்திற்கு முன் தாய் வீட்டிற்கும், திருமணத்திற்கு பின் புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஜோதிடக் கணிப்புகள் சொல்வது, சில ராசிகளில் பிறந்த பெண்கள் வாழ்க்கையில் வரம்பற்ற அதிர்ஷ்டத்தை மட்டுமல்ல, அவர்களின் கணவருக்கு கோடீஸ்வர யோகம் வரச்செய்வதும்தான். அவர்கள் சுப கிரகங்களின் துணையுடன், வீட்டுக்கே சுபத்துவமும், செல்வச் சுகமும் கொண்டு வருவார்களாம்.
25
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தனுசு ராசி!
தனுசு ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பார்கள் என்கிறது ஜோதிட நூல்கள். தனுசு ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் நேர்மையானவர்களாகவும் ஆன்மிக உணர்வு நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் திருணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் போது அந்த வீட்டில் சுப கிரகங்கள் உறைவு கொள்கிறதுபோல் மாற்றங்கள் வர ஆரம்பிக்கும். குறிப்பாக, அவர்கள் கணவரின் வாழ்க்கையில் வளர்ச்சியின் உச்சத்தை தொடும். தொழில் வளர்ச்சி கூடும், வருமானம் பல மடங்கு அதிகரிக்கும், சமூகத்தில் அவருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தனுசு ராசியில் உள்ள பெண்களின் கணவருக்கு செல்லும் இடமெல்லாம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். அதேபோல் பொன் பொருள் சேர்க்கை அதிகரிப்பதுடன் புதிய பதவிகளும் பட்டங்களும் தேடி வரும். இதனால் அவர் தனது மனைவியை அதிர்ஷ்ட தேவதையாகவே பார்ப்பார்.
35
தனுசு ராசி பெண்கள் குடும்ப குலவிளக்கு
தனசு ராசி பெண்கள் தனது கணவர் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போது அங்கு குரு கிரகத்தால் ஆன்மிக சக்தி அதிகமாகும். அவர் தனது கணவர் குடும்பத்தில் நற்பண்புகளை பரப்புபவார். இதனால் குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பும் அரவனைப்பும் அதிகமாகும். அவர் கணவரின் முடிவுகளுக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் இருப்பர். தனசு ராசி பெண்கள் கணவரின் வாழ்க்கை சூழலை நேர்மறை மாற்றுபவர். மேலும் அவர் எதிலும் நம்பிக்கையுடன் செயல்படுவார். இதனால் தனுசு ராசி பெண்கள் மீது அவரது கணவருக்கு அன்பும், நம்பிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றி அடையும். தனுசு ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் கணவருக்காக எதையும் தியாகம் செய்யத் தயங்க மாட்டார்கள் என்கிறது ஜோதிட நூல்கள். இதுவே அவரது வாழ்க்கையில் ஒரு வலிமையான உறவை உருவாக்குகிறது என்றால் அது மிகையல்ல.
தனுசு ராசி பெண்களால் கணவருக்குக் கிடைக்கும் நன்மைகள்
தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி கிடைக்கம்.
முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.
முதலீடுகளில் பணமழை கொட்டும்.
சொத்துக்கள் சேர்க்கை பலமடங்கு அதிகரிக்கும்
அரசாங்கத் பணி அல்லது உயர்ந்த பதவிகள் கிடைக்கும்
சமூகத்தில் மதிப்பம் மரியாதையும் கிடைக்கும்
55
எல்லாமும் கிடைக்கும் நல்லதே நடக்கும்!
இதை ஆதரிக்கும் பல ஜோதிட நூல்கள், அதில் குறிப்பாக "பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்", "ஜாதக அலங்காரம்" போன்றவை தனுசு ராசிப் பெண்களின் கிரக அமைப்புகள் அவர்களின் கணவருக்கு சுபமான யோகம் தரும் என்று கூறுகின்றன. இது மட்டுமல்ல, மீன ராசி, ரிஷப ராசி, கடகம் ராசி போன்ற ராசிகளிலும் பிறந்த பெண்கள், சில நேரங்களில் கணவரின் செல்வ வாழ்வுக்கு பஞ்சமே இல்லாமல் செய்வார்கள். ஆனால் தனுசு ராசி பெண்கள் அளிக்கும் கோடீஸ்வர யோகம், மிகவும் உறுதியானதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். ராசி என்பது வெறும் தோராயமான அறிகுறி மட்டுமே. நட்சத்திரம், லக்கணம் மற்றும் நவகிரக நிலைகள் ஆகியவையே அதன் முழுமையான கணிப்புக்கு முக்கியம்.ஆனாலும், தனுசு ராசியில் பிறந்த பெண்ணை வாழ்க்கை துணையாகப் பெறுவது வாழ்வில் ஒரு பெரிய ஆசீர்வாதமாகும் என்பது உண்மை.