
அடுத்தவர்களுக்கு உதவி செய்து அதனால் ஆனந்தப்படும் மேஷ ராசி நேயர்களே இன்றைய நாள் உங்கள் செயல் திறனை மெருகூட்டும். வேலையில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க செய்யும் தொழில் மற்றும் பணிக்கு தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்து இருப்பது முக்கியம். உங்கள் அறிவுத்திறனை பார்த்து மேலதிகாரிகள் பாராட்டும் வாய்ப்பு உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர் மீண்டும் வர வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவி இடையே புரிதல் மேம்படும், அன்பு மேலோங்கும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். நண்பர்கள் சிலர் உங்களிடம் சந்தோஷம் தரும் முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வாகனம் சார்ந்த செலவுகள் ஏற்படலாம் என்பதால் பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்காலம் குறித்த திட்டம் ஒன்று வெற்றி பெறும். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். தியானம் மற்றும் யோகா மூலம் மன அமைதி பெருகும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அடுத்தவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து மகிழும் ரிஷப ராசி நேயர்களே இன்று உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றி அடையும். பண வரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் வளர்ச்சி ஏற்படும். வீடு, நிலம் உள்ளட்ட சொத்துக்கள் வாங்கும் எண்ணம் உருவாகும். குடும்பத்தில் பாசம் பொங்கி வழியும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாசத்தை பொழிவார்கள். பெற்றோர் உள்ளிட்ட பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களுக்கு குழந்தைகளின் கல்வி தொடர்பான தகவல்கள் மகிழ்ச்சி தரும். பால்ய நண்பர்களுடன் பழைய நினைவுகள் பகிர்ந்து மகிழ்வீர்கள். நன்மை தரும் பயண வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உணவில் கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டியது அவசியம். திடீர் பரிசுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். மொத்தத்தில் இன்றைய நாள் உங்களுக்கு மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அள்ளித்தரும் பொன்னாள்.
இக்கட்டான சூழ்நிலையிலும் தெளிவாக முடிவெடுத்து அசத்தும் திறன் கொண்ட மிதுனராசி நேயர்களே இன்று உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் மதிக்கப்படும். உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்த ஏற்ற நாள். வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலனை அறுவடை செய்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் மறைந்து காணாமல் போகும். தொழில் வியாபாரம், முதலீடு உள்ளிட்டவைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிக்கும் தைரியமும் அறிவும் உங்களை வெற்றிக்கு அழைத்து செல்லும். பண வரவு சீராக இருக்கும் என்பதால் நிதி தட்டுப்பாடு இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்/மனைவிக்கு ஆதரவாக இருப்பீர்கள். குழந்தைகளின் நீண்டநாள் ஆசைகள் இன்று நிறைவேறும். ஆன்மீக இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மதிப்பு கொடுக்கும் கடக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நாள். திட்டமிட்டு செயல்பட்டால் பதவியும் புகழும் உங்களுக்கு கிடைக்கும். நிதி மற்றும் பண விஷயங்களில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் சாத்தியம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த பழைய கடன் வசூலாகும். மனச்சோர்வு தவிர்த்து மன உறுதியுடன் செயல்பட்டால் எதிரே வரும் அனைத்து தடைகளையும் அடித்து தும்சம் செய்யலாம். உடல் நலத்தில் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவை. பழைய நண்பர்கள் தொடர்பு கொண்டு உதவுவார்கள். ஆன்மீக அனுபவங்கள் இன்று ஏற்படும். ஆலய வழிபாடு நன்மை தரும். இன்று உங்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் இறுதியில் இனிப்பான வெற்றி கனியை சுவைத்து மகிழ்வீர்கள்.
நண்பர்களையும், உறவினர்களையும் நல்வழி நடத்தி அதனால் மகிழ்ச்சி காணும் சிம்ம ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக ஒதுக்கி வைத்திருந்த காரியங்களை இன்று செயல்படுத்த முடியும். வியாபாரம் மற்றும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். திடீர் பண வரவு உங்களை திக்குமுக்காட வைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் தேடி வந்து உதவி செய்வர், திடீர் பரிசுகளை வழங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து மகிழ்ச்சி படுத்துவர். நெருக்கமானவர்கள் மீது மனதில் இருந்த சந்தேகங்கள் தெளியும். திடீர் திருப்பமாக பகைவர்கள் சாதகமாக மாறுவர். கணவன்-மனைவி இடையே மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளின் சிறந்த செயல்திறன் உங்களை பெருமைப்பட வைக்கும். ஆன்மீக ஈர்ப்பு அதிகரிக்கும். புனித இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பணத்தையும் தேவையை விட அதிகமாக கொடுத்து ஆச்சரியப்படுத்தும்.
நேர்மையின் மறு உருவமாக இருக்கும் கன்னி ராசி நேயர்களே இன்று உங்களின் நீண்டகால முயற்சிகள் பலனளிக்க ஆரம்பிக்கும். அலுவலக வேலை தொடர்பான செயல்களில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் செய்யும் செயல்களில் உங்கள் திறமையை வெளிக்காட்ட அனுகூலமான சூழ்நிலை உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதனால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். பால்ய நண்பர்களுடன் இணைந்து பயணிக்க வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. உணவில் கட்டுப்பாடு அவசியம். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். முன்னோர்களை நினைவுகூரும் நாள். மொத்தத்தில் இன்றை பொழுது உங்களுக்கு பணம் மற்றம் புகழை அள்ளி அள்ளி கொடுக்கும்.
நீதியின் பக்கம் நிற்கும் துலாம் ராசி நேயர்களே இன்று உங்களின் சில வேலைகள் திட்டமிட்டபடி நிறைவேறாது. அதனால் ஏற்படும் மனச்சோர்வை தவிர்க்க தியானம் பயனளிக்கும். தொழிலில் வரும் புதிய வாய்ப்புகளை கவனமுடன் கையாள வேண்டும். பண வரவு சீராக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் பாசம் நிறைந்த நாள். கணவன்/மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். குழந்தைகளின் சாதனைகள் மகிழ்ச்சி தரும். வாகனம் சார்ந்த செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் ஏற்பட்ட பழைய நிகழ்வுகளை நினைத்து மகிழ்வீர்கள். ஆன்மிகமாக புதிய திசையில் பயணம் ஆரம்பிக்கும். இன்றைய நாள் உங்களிடம் உண்மையாக இருப்பவர்களை உங்களுக்கு வெளிப்படுத்தும். நெருக்கமானவர்களை புரிந்துகொள்வீர்கள்.
எதிரிகளை கூட மதித்து அன்பு செய்யும் விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்களது புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நாள். வணிகம் மற்றும் தொழிலில் புதிய வாய்ப்பு கைகூடும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறந்த உரையாடல் நடைபெறும். கணவன்-மனைவிக்கிடையே அன்பும் அன்யோன்யமும் அதிகரிக்கும். நிதி தொடர்பான சிறிய திடீர் செலவுகள் வந்தாலும், கூடுதல் வருமானம் சுமையை குறைக்கும் . நண்பர்கள் உங்களை தேடி வந்து ஆதரிப்பார்கள். உடல்நலத்தில் சிறிய தொந்தரவுகள் வரலாம். ஆன்மிக வழிகாட்டும் நிகழ்வுகளில் பங்கு பெறுவீர்கள். இன்றைய நாள் உங்களின் முயற்சிகளுக்கு வெற்றியை பரிசாக தரும்.
இலக்கு ஒன்றை நிர்ணயம் செய்து அதன்படி நடக்கும் தனுசு ராசி நேயர்களே இன்று உங்கள் செயல்களில் உறுதி தேவைப்படும் நாள். பண விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலை சார்ந்த பயணங்கள் திடீரென நிகழலாம். திட்டமிட்டு செயல்பட்டால் எதிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் அமைதியும் சந்தோஷமும் நிலவும். புதிய பரிசுகளும், வாய்ப்புகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் மதிப்பதுடன் அதன்படி நடப்பார்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆன்மீக விசாரணைகள் மேம்படும். கணவன்/மனைவிக்கிடையே அன்பு நிலவும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பாராத நல்ல பலன்களை அள்ளித்தந்து மகிழ்ச்சிப்படுத்தும்.
பணத்திற்கும் புகழிற்கும் ஆசைப்படாத மகரராசி நேயர்களே இன்று உங்கள் வாழ்வில் ஒரு புதிய உதயம் பிறக்கும். தொழிலில் புதிய வாய்ப்பு காத்திருக்கிறது கவலை வேண்டாம். பண வரவு எதிர்பார்த்தைவிட பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் திறமை மேம்படும் அதன் முலம் வருமானம் உயரும். குடும்பத்தில் பாசமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் காணப்படும். சிறப்பு விருந்து நிகழ்வுகளில் பங்கேற் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் வழியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆன்மிக செயல்களில் ஈடுபடுவதால் மனநிலை அமைதியாக இருக்கும். புதிய நட்பு உருவாகும். திட்டமிடல் நன்றாக அமையும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு புதிய வாய்ப்புகை தரும்.
எப்போதும் சுறுசுறுப்புடன் சிட்டாக பறக்கும் கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் நீண்டநாள் சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய பயணத்தில் இருந்து நல்ல அனுபவம் கிடைக்கும். ஆன்மிக பிரவேசம் உண்டாகும். புதியதொரு திட்டத்தை இன்று தொடங்க வாய்ப்பு உண்டு. மொத்தத்தில் இன்றைய நாள் உங்களுக்கு எதிர்கால திட்டங்களுக்கு முதல் அடி எடுத்து வைக்கும் வாய்ப்பை வழங்கும்.
அடுத்தவர்களுக்கு உதவி செய்து மனமகிழும் மீனராசி நேயர்களே இன்று உங்கள் சிந்தனைகளுக்கு மதிப்பு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நிதியில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் சொற்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். விலகி நின்ற உறவுகள் உங்களை தேடி வருவர். பிள்ளைகளின் கல்வியில் சிறந்த முடிவுகள் கிடைக்கும். ஆன்மிக இடங்களுக்கு பயணம் செய்ய வாய்ப்புகள் வரலாம். அமைதி தேவைப்படும் நாள். இன்று உங்களுக்கு மனநிறைவு தரும் செய்தி வரும்.