
Mars Ketu Conjunction Predictions Palan in Tamil : ஜோதிட ரீதியாக பார்க்கையில் கிரக சேர்க்கையில் ஒருவரது வாழ்க்கையில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அப்படி முக்கியமான சேர்க்கைகளில் ஒன்று தான் செவ்வாய் கேது சேர்க்கை. இந்த சேர்க்கைக்கு அங்காரக யோகம் அல்லது அங்காரக தோஷம் என்று குறிப்பிடப்படுகிறது.
செவ்வாய் மற்றும் கேது சேர்க்கை சுப பலன்களையும், அசுப பலன்களையும் தரக்கூடியது. செவ்வாய் மற்றும் கேது பலன்கள் ஜாதகத்தில் இந்த சேர்க்கை எந்த வீட்டில் (பாவம்) நிகழ்கிறது, கிரகங்களின் பலம், நிற்கும் நட்சத்திரம், பார்வை பெறும் கிரகங்கள் மற்றும் தசா-புத்தி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
கடந்த ஒன்றரை மாதங்களாக செவ்வாய் மற்றும் கேது இணைந்து பயங்கரமான சேர்க்கையை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக உலகெங்கும் அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக விமான விபத்து, தீவிரவாத தாக்குதல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் என்று மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
செவ்வாய் மற்றும் கேது ஆகியவை மிகவும் அசுபமான இடத்தில் உள்ளன. கேது சிம்ம ராசியிலும், செவ்வாயும் சிம்ம ராசியிலும் உள்ளன. செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கையானது சமீபத்திய நாட்களில் நிகழ்ந்து வரும் போர், வன்முறை, விமான விபத்துகள், நிலச்சரிவுகள் போன்றவற்றுக்குக் காரணமாக இருக்கலாம். அடுத்த 7 நாட்கள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜூலை 21 முதல் ஜூலை 28 வரை செவ்வாய் கேதுவின் மீது செல்வதால், இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும். எனவே, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜூலை 28 அன்று செவ்வாய் கன்னி ராசிக்குள் நுழையும் போது, இந்த சேர்க்கை முறிந்து மக்களுக்கு சிறிது நிவாரணம் கிடைக்கும்.
செவ்வாய், கேது மற்றும் சனியும் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றன. இதனால் இந்த சேர்க்கை பயங்கரமான பலன்களைத் தருகிறது. சனி தற்போது வக்ர நிலையில் உள்ளது. இதனால் அதன் தாக்கமும் சற்று குறைந்துள்ளது.
செவ்வாய் மற்றும் கேதுவின் அசுப சேர்க்கை 4 ராசிகளுக்கு மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறலாம். இந்த ராசிகள் மேஷம், சிம்மம், கன்னி மற்றும் மீனம். ஜூலை 28 வரை இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இது அவர்களின் தொழில் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, உங்கள் வேலையை முழு நேர்மையுடன் செய்ய வேண்டும்.
யாருடைய ஜாதகத்தில் செவ்வாய், ராகு மற்றும் கேது அசுப ஸ்தானத்தில் இருக்கிறதோ, அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு யாருடனாவது சர்ச்சைகள் ஏற்படலாம். அவர்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். அவர்களின் தொழில் வாழ்க்கையில் நெருக்கடி ஏற்படலாம்.
செவ்வாய் மற்றும் கேது சேர்க்கையின் போது வெளியூர், வெளிநாடு பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கூட ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்ட நெரிசல்களில் உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
செவ்வாய் கேதுவின் சேர்க்கையால் உண்டாகும் தாக்கங்களை குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
அங்காரக வழிபாடு:
செவ்வாய் பகவானை வழிபடுவதும், முருகனை வழிபடுவதும் மிகவும் நல்லது.
கேது வழிபாடு:
விநாயகர் அல்லது நாக தேவதைகளை வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.
தான தர்மங்கள்:
செவ்வாய்க்கிழமை ரத்த தானம் செய்வது, செவ்வாய் மற்றும் கேது தொடர்பான பொருட்களை (சிவப்பு நிற ஆடைகள், வெண்கலப் பொருட்கள், எள், கம்பு) தானம் செய்யலாம்.
தியானம், யோகம்: கோபத்தைக் கட்டுப்படுத்த தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.