விருச்சிக ராசி பெண்கள் தங்கள் நேர்மை, தன்னம்பிக்கை மன உறுதியால் ஆண்களை ஈர்க்கிறார்கள். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சிறந்து விளங்கும் இவர்கள், ஆழமான அன்பு மற்றும் ஆன்மீக சிந்தனைகளால் ஆண்களை தங்கள் வழியில் நடக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
ஜோதிடமும் வாழ்க்கை முறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்கின்றன ஜோதிட நூல்கள். நம்முடைய ஜாதக ராசி, பிறப்புக்கு நேர்த்தியாகப் பொருந்தும் ஒரு சக்திவாய்ந்த அடையாளம். ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள், வாழ்க்கை நடைமுறைகள், உறவுச் செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு சில ராசிகளில் பிறப்பது என்பது, அவர்களுடைய ஆளுமையை வலிமைப்படுத்தும் ஒரு பரிசாகவே அமைகிறது. இந்த ஒரு ராசிக்கார பெண்கள் – ஆண்களை தங்களது வார்த்தைகளால், எண்ணங்களால், அழகிய நிதானத்தால் கட்டுப்படுத்தக்கூடிய சக்தியை பெற்றிருப்பார்கள்.
26
விருச்சிக ராசியா உங்களுக்கு.?
விருச்சிக ராசிக்கார பெண்கள்.!இவர்கள் தான் அந்த சக்தி வாய்ந்தவர்கள்! இந்த ராசியில் பிறந்த பெண்கள் எந்த இடத்திலும் மறைந்தோ ஒளிந்தோ இருப்பது இல்லை. நேர்மையாகவும், சுறுசுறுப்பு உணர்வுகளுடனும், தன்னம்பிக்கையுடனும் விருச்சிக ராசி பெண்கள் இருப்பார்கள். இவர்களின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதை சில நேரங்களில் நெருங்கிய நண்பர்கள் கூட புரிந்து கொள்ள முடியாது. ஆனால் வெளியில் பார்ப்பவர்களுக்கு, இவர்களிடம் ஒரு காந்தவலிமை உள்ளது என்பதை அறியலாம்.
36
வழிநடத்தும் தலைமை பண்பு
விருச்சிக ராசிக்கார பெண்கள் சிறந்த தலைமைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தன்னுடைய கணவரையும் குடும்பத்தினரையும் உறவினர்களையும் உண்மையாகவும் முழு மனதுடனும் நேசிப்பார்கள், ஆனால் அந்த நேசத்தில் உரிமையும் இருக்கும். அவர்களின் குரல் அமைதியாக இருந்தாலும் அதில் ஆணையைப் போல ஒரு உரிமை பசுமையாக ஒளிரும். இதுவே ஆண்கள் தாமாகவே இவர்களிடம் வலுவிழந்து நடப்பதற்கான முக்கிய காரணம்.
விருச்சிக ராசிக்கார பெண்கள் மனதளவில் மிகவும் உறுதியானவர்கள். அவர்கள் எடுத்த முடிவுகளை மாற்றுவது மிகவும் கடினமாக இருக்குமாம். அவர்கள் விரும்பும் ஒருவரை ஈர்க்க அவர்கள் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்கிறது ஜோதிடம். அந்த தைரியம், நேர்மை, உளவுத்திறமை ஆகியவை ஆண்களை ஒரு பயமுறுத்தும் ஈர்ப்பில் தள்ளிவிடுமாம். மேலும் சுறுசுறுப்பாக இருப்பதால் எதையும் சோர்வில்லாமல் சோம்பல் இல்லாமல் செய்வார்கள். அதுவும் அவர்களுக்கு பக்கபலாமாக இருக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.
56
தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை
தொழிலில் இவர்களது நுட்பமான திட்டங்கள், கூர்மையான பார்வை, காலத்தை முன்னறியும் புத்திசாலித்தனம் இவர்களை வெற்றி நாயகிகளாக்கும். குடும்பத்தில், கணவரை பாசத்தாலும், படிப்படியான கட்டுப்பாடுகளாலும் வழிநடத்தக்கூடிய திறமை இவர்களிடம் இருக்கும். கணவர்கள் இவர்களிடம் ஒரு வகையான மரியாதையுடன் பழகுவர் – இதுவே அந்த "உத்தரவு" உணர்வை ஏற்படுத்தும்.
66
ஆன்மீகம் ஈடுபாடு, ரகசியம்
விருச்சிக ராசிக்கார பெண்கள் ஆன்மீக எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பர். ஆன்மீகம் மட்டுமின்றி, எதையும் ஆழமாக உணரும் மனதுடன் பிறந்தவர்கள் அவர்கள். அவர்கள் உங்களிடம் இருந்தால், அவர்களது ஆதரவு வாழ்க்கையை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தும். ஆனால், அவர்கள் விலகினால், அவர்களை மீண்டும் பெறுவது மிகச் சிரமம். நீங்கள் ஒரு விருச்சிக ராசிக்கார பெண்ணாக இருந்தால், உங்கள் ஆளுமை, ஆழம், அழகு, உரிமை, நம்பிக்கை – அனைத்தும் உங்கள் பக்கத்தில் ஆண்களை கூட்டிக் கொள்வதற்கான சக்திகள். இந்த ராசியின் உண்மை ரகசியமே இதுதான் – பேசாமல், திட்டமிடாமல் கூட ஆண்கள் உங்களை நம்பி, உங்கள் வழியில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்!