Birth Date: இந்த தேதில பிறந்தவங்க கிட்ட ரகசியத்தை சொல்லாதீங்க!! எல்லோரிடமும் சொல்லிடுவாங்க

Published : Jul 23, 2025, 03:27 PM IST

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களிடம் ரகசியத்தை சொன்னால் அவர்கள் அதை கசிய விட அதிக வாய்ப்பு உள்ளது.

PREV
15
Secrets Revealed by Numerology Birth Date

எண் கணிதம் என்பது ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரைப் பற்றிய ரகசியங்களை சொல்லிவிட முடியும். இந்து மதத்தில் ஜோதிடத்தைப் போலவே எண் கணிதமும் ஒருவரது ஆளுமை, குணநலன்கள், இயல்பு, எதிர்காலம் என அவரைக் குறித்த பல விஷயங்களையும் வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் என் கணிதத்தின்படி சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே வித்தியாசமானவர்கள். அதாவது அவர்கள் பிறரது தனிப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். முக்கியமாக அவர்களிடம் நம்பிக்கையாக இருந்து அவர்களது ரகசியத்தை அறிந்து கொண்டு அதை பிறருக்கு சொல்லிவிடுவார்கள். எனவே எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த குணங்கள் உண்டு என்று இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.

25
5, 14 மற்றும் 23 தேதிகள்

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் பிறரது வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். மேலும் அவர்களை குறித்த ரகசியங்களை பிறரிடம் சொல்ல ஒருபோதும் தயங்க மாட்டார்கள். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்று எண் கணித நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

35
8, 17 மற்றும் 26 தேதிகள்

எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் பிறரது விவகாரங்களில் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் அவர்களுடன் நட்புக்காக பழகி அவர்களது ரகசியங்களை தெரிந்து கொண்டு, தங்களது சுயநலத்திற்காக அதை பிறருக்கு வெளிப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

45
9, 18 மற்றும் 27 தேதிகள்

எண் கணிதத்தின் படி இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் எல்லாரிடமும் நன்றாக பழகுவார்கள். இவர்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும், ரகசியங்களை வெளிப்படுத்துவதிலும் மகிழ்ச்சி அடைவார்கள்.

55
3, 12, 21 மற்றும் 30 தேதிகள்

எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் அனைவரிடமும் நட்பாக பழகுவார்கள். ஆனால் வாய்ப்பு கிடக்கும்போது அவர்களை ஏமாற்ற ஒருபோதும் தயங்க மாட்டார்கள். முக்கியமாக இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வது ரொம்பவே ஆபத்து என்று என் கணித நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories