Birth Date: இந்த 4 தேதிகள்ல பிறந்தவங்க அதிர்ஷ்டசாலி!! அவங்க யோகத்துக்கு காரணம் இதுதான்

Published : Jul 24, 2025, 06:02 PM IST

எண் கணிதத்தின் படி, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலிகள். அது ஏன் என்று இந்த பதிவில் காணலாம்.

PREV
15
Numerology Number 3 Personality

எண் கணிதம் என்பது ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை, குணாதிசயங்கள், எதிர்காலம் மற்றும் எப்படிப்பட்ட பலன்களை அனுபவிப்பார் என்பதை கணிக்க முடியும். அந்த வகையில் எந்த மாதத்திலும் 3, 12, 21மற்றும் 30 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் எண் 3இன் கீழ் வருவார்கள். குருபகவான் இந்த எண்ணை ஆளுகிறார். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மீது மகாலட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்கும். இத்தகையவர்களால் வீட்டில் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் நிரம்பும். சரி இப்போது இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் ஏன் அதிர்ஷ்டசாலிகள் என்பதை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

25
எண் 3

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 3ம் தேதி பிறந்தவர்கள் ரொம்பவே அமைதியானவர்கள் மற்றும் சாந்தகுணமுடையவர்களாக இருப்பார்கள். முக்கியமாக இவர்கள் அவர்களது தந்தைக்கு பிடித்த நபர். இவர்கள் தங்களது தந்தைக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார்கள். இவர்களால் வீட்டில் மகாலட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும். இந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்களது பிறந்த வீடும் மற்றும் புகுந்து வீட்டிற்கு செல்வம், மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் நபராக இருப்பார்கள்.

35
எண் 12

எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் இந்த தேதியில் பிறந்த நபர்கள் லட்சுமிதேவிக்கு பிடித்த நபராக இருப்பார்கள். இவர்கள் செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும். மேலும் இவர்கள் தங்களது பெற்றோருக்கு அதிர்ஷ்டத்தை தருவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல் மதிப்பு, மரியாதை அதிகமாகவே கிடைக்கும். இவர்களால் வீட்டில் பண பிரச்சனை ஒருபோதும் வரவே வராது. அப்படி வந்தாலும் உடனே தீர்ந்து விடும். மேலும் இந்த தேதியில் பிறந்த பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் செல்வம், செழிப்பும், மகிழ்ச்சி, பணம் அதிகரிக்கும்.

45
எண் 21

எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் இந்த தேதியில் பிறந்த நபர்கள் தங்களது பெற்றோருக்கு புகழ் மற்றும் கௌரவத்தை தரக்கூடிய நபராக இருப்பார்கள். மேலும் இந்த தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே புத்திசாலித்தனமாக இருப்பார்கள். இவர்கள் சாதிக்க நினைத்ததை சரியாக திட்டமிட்டு சாதித்து விடுவார்கள். இவர்களது கனவு நினைவாக வாய்ப்பு அதிகம் உள்ளன. முக்கியமாக இந்த தேதியில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டில் கால் வைத்த உடனே சகல ஐஸ்வர்யங்களும் அந்த வீட்டிற்கு கிடைக்கும்.

55
எண் 30

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த தேதியில் பிறந்த நபர்களால் அந்த வீடு ரொம்பவே அழகாக மாறிவிடும். இவர்கள் கடின உழைப்பாளிகள் எந்த ஒரு பிரச்சனையை வந்தாலும் அதை மன தைரியத்துடன் எதிர்கொள்வார்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாகவே இருப்பார்கள். மேலும் இவர்கள் சாந்த குணமுடையவர்கள். இந்த தேதியில் பிறந்த நபரை திருமணம் செய்பவருக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories