
ஜோதிட சாஸ்திரங்களின்படி ஜூலை 4-ம் தேதி, சுக்கிரன் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த சுக்கிர பெயர்ச்சி சில ராசிகளுக்கு இதனால் நன்மை கிடைக்கும். ஆனால், சிலருக்கு உறவுகள், செலவுகள், மற்றும் தொழில்ரீதியான பிரச்சனைகள் வரலாம். பிரபல ஜோதிடர்களின் கருத்துப்படி ரிஷபம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் அசுப பலன்கள் ஏற்பட போகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த சுக்கிர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வரலாம். வீட்டில் உள்ள ஒருவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து அல்லது வாகனம் தொடர்பான விஷயங்களில் அவசரப்பட்டால் நஷ்டம் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும், அதனால் பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது. வேலை செய்யும் இடத்திலும் பொறுமையாக இருங்கள், யாரிடமும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மஹாலக்ஷ்மி அம்மனுக்கு நெய் தீபமேற்றி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். வசதியற்ற பெண்களுக்கு அல்லது பெண் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற இனிப்புகளை தானமாக வழங்கலாம்.
இதையும் படிங்க: ஜூலை 6 டூ 12 பண மழையில் நனையப்போகும் 4 ராசிகள்!: https://tamil.asianetnews.com/gallery/astrology/weekly-horoscope-july-6-to-12-2026-career-finance-and-love-predictions-for-all-12-zodiac-signs-ewxxt3g
கன்னி ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம், வேலைகளில் தாமதமும் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வதற்கு முன், நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். எந்த ஒரு முக்கிய முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். மன அழுத்தம் உங்கள் உடல் நலத்தையும் பாதிக்கக்கூடும். மற்றவர்களின் சண்டைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. "ஓம் சுக்ராய நமஹ" என்ற மந்திரத்தை 24 முறை உச்சரிக்கவும். வெள்ளை நிறப் பசுமாட்டிற்கு வெள்ளிக்கிழமை அன்று பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து உணவாகக் கொடுக்கலாம்.
இந்த சுக்கிர பெயர்ச்சி, மகர ராசிக்காரர்கள் பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. திடீர் செலவுகள் அதிகரிக்கலாம் அல்லது வர வேண்டிய பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். யாருக்கும் கடன் கொடுக்கும் முன்போ அல்லது புதிய முதலீடு செய்யும் முன்போ நன்றாக யோசியுங்கள். திருமண வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட சண்டை வரலாம், அதனால் பேச்சில் நிதானம் தேவை.
பரிகாரம்: சுக்கிர பகவானின் அதிதேவதையான ஸ்ரீ ரங்கநாதர் அல்லது பெருமாளை சனிக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வாருங்கள். ஏழை எளியவர்களுக்கு அல்லது துப்புரவுப் பணியாளர்களுக்கு உங்களால் இயன்ற பண உதவி அல்லது வெள்ளை நிற ஆடைகளைத் தானமாக வழங்குங்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி சில சவால்களைக் கொண்டு வரலாம். உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது தொழில் பார்ட்னருடன் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். எந்தவொரு பிரச்சனையையும் அமைதியாகப் பேசித் தீர்க்க முயற்சி செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் போட்டி அதிகரிக்கலாம், அதனால் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். உடல்நல விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம், தினசரி பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்றுங்கள்.
பரிகாரம்: தினமும் காலை வேளையில் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சன்னதியில் உள்ள சுக்கிர பகவானுக்கு மொச்சைப்பயிறு நைவேத்தியம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். பறவைகளுக்கு, குறிப்பாக புறாக்களுக்கு தானியங்களையும் தண்ணீரையும் தினமும் உணவாக வையுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், மத நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. இந்தத் தகவல்களை வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஒரு ஊடகமாக மட்டுமே நாங்கள் இருக்கிறோம். வாசகர்கள் இந்தத் தகவல்களை வெறும் தகவலாக மட்டுமே கருத வேண்டும்.