வாஸ்து சாஸ்திரம் வீட்டின் மகிழ்ச்சி, பொருளாதாரம், ஆரோக்கியம் இப்படி பல விஷயங்களில் தொடர்புடையது. வாஸ்து பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திரிந்தால் ரோஜா பூக்களின் பங்கு குறித்தும் அறிந்திருப்பீர்கள். பொதுவாக தன்னுடைய வீட்டில் தூய்மையும், நேர்மறை ஆற்றலும் இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள்.
24
Rose Plants Vastu Tips In Tamil
வீட்டை புதியதாகவும், அழகாகவும் வைத்திருக்க விதவிதமான நடவடிக்கையில் மக்கள் ஈடுபடுகின்றனர். இதற்கென பல பொருள்களை வாங்கி வீட்டில் குவிக்கின்றனர். வீடு வாசனையாக இருக்க பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். ஆனால் எவ்வளவு தான் முயன்றாலும் சில விஷயங்கள் சரியாக இல்லாவிட்டால் அந்த வீட்டில் நல்ல வாசனை கூட இருக்காது. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட இந்த முறையை பின்பற்றினால் வீட்டில் கூடுதலான அமைதியும், நல்ல வாசனையும் இருக்கும்.
வீட்டில் வாஸ்துவை முறையாக பின்பற்றினால் பகலில் மகிழ்ச்சி இரட்டிப்பாகவும், இரவில் 4 மடங்காகவும் அதிகரிக்கும். மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. உங்கள் வீட்டை பகல் முழுக்க நல்ல வாசனையுடன் வைத்திருக்க வேண்டுமென்றால் காலையில் இந்த விஷயத்தை பண்ண வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக கண்ணாடி கிண்ணத்தில் இளநீர் நிரப்புங்கள். அதில் செடியில் பறித்த புதிய ரோஜா இதழ்களை போடுங்கள். இதனை சுத்தமான காற்று வீசும் இடத்தில் வைக்கவும். இப்படி செய்வதால் நேர்மறை காற்றினால் வீடு நிரம்பும். புதிய காற்று ரோஜா மணத்துடன் வீட்டில் பரவுவதால் உங்களுடைய மனநிலையும் சாந்தமாக இருக்கும்.
ரோஜா இதழ்கள் போடப்பட்ட கிண்ணத்தை வீட்டின் கிழக்குப் பகுதியில் வையுங்கள். புதிய ரோஜா இதழ்கள் உங்களுடைய வீட்டைச் சுற்றிலும் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன. வாஸ்து சாஸ்திரங்களின் படி இந்த கிண்ணத்தை வீட்டின் பிரதான கதவுக்கு பக்கமாக தான் வைக்க வேண்டும். இதன் மூலமாக, மகாலட்சுமி, குபேரன் அருள் கிடைக்கும். ஏனென்றால் இந்த கடவுள்களுக்கு ரோஜா இதழ்கள், அதன் வாசனை விருப்பமானதாகும். உங்களுக்கு பணம் தொடர்பான நிதி சிக்கல் இருந்தால் அந்த பிரச்சனை விரைவில் நீங்கிவிடும்.