Ketu in Uttara Nakshatra Palan in Tamil : நவம்பர் 10ல் உத்திர பால்குனி நட்சத்திரத்தில் நுழைந்த கேது, பிப்ரவரி 7, 2025 வரை அங்கேயே இருக்கும். இது 3 ராசிகளுக்கு எந்த மாதிரியான பலனை கொடுக்கும் என்று பார்க்கலாம் வாங்க...
Ketu Transit 2024, Astrology, Ketu in Uttara Nakshatra Palan in Tamil
Ketu in Uttara Nakshatra Palan in Tamil : கேது வக்ரகதியில் சலனமடைவதால், முதலில் கன்னி ராசியிலும் பின்னர் சிம்ம ராசியிலும் சஞ்சரிக்கும். சோதிடத்தில் ராகு கேது இரண்டும் நிழல் கிரகங்கள். ராகுவைப் போலவே கேதுவும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாறும். நவம்பர் 10 இரவு 11:31 மணிக்கு கேது உத்திர பால்குனி நட்சத்திரத்தில் நுழைந்த கேது பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 வரை அங்கேயே இருப்பார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். கேதுவின் ராசி மாற்றம் யாருக்கெல்லாம் என்ன பலன் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம் வாங்க…
24
Ketu Peyarchi 2024 Palan Tamil, Ketu in Uttara Nakshatra Palan in Tamil
கும்ப ராசி:
இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பேச்சில் மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தில் லாபம் கிடைக்கும். புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கேது உத்திர பால்குனி நட்சத்திரத்தில் நுழைவதால் மகர ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்க போகிறது. நஷ்டப்பட்ட தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள்.
44
Ketu in Uttaraphalguni Nakshatra Palan in Tamil, Zodiac Signs
தனுசு ராசி:
கேதுவின் தாக்கத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு வந்து சேரும். கேதுவின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீக்கி கொடுக்கும். புதிய தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். செல்வம், செல்வாக்கு சேரும். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவார்கள். அந்தஸ்து உயரும் நேரம்.