சனி அருளால் 2025ல் உச்சத்துக்கு செல்லும் ராசிக்காரங்க யாரெல்லாம்? ஜாக்பாட், வசதி வாய்ப்பு எல்லாமே இருக்குமா?

First Published | Nov 12, 2024, 7:48 AM IST

Sani Peyarchi 2025 Palan in Tamil : 2025 ஆம் ஆண்டு நிகழக் கூடிய சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் அவர்கள் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். அதில், இந்த 3 ராசியினருக்கு என்னன்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க…

Sani Peyarchi 2025, 2025 Sani Peyarchi

சனி பெயர்ச்சி 2025:

Sani Peyarchi 2025 Palan in Tamil : 2025 ஆம் ஆண்டு முதல், சனி பகவானின் அருளால் இந்த மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் மாறும். சனி கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது. சனி கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் கிரகம். அடுத்த வருடம் சனி பகவானின் அருள் மூன்று ராசிகளின் மீது நிலைத்திருக்கும். ஏனெனில் அடுத்த வருடம் சனி மீன ராசியில் பிரவேசிக்கிறார். அந்த மூன்று ராசிகள் யாரெல்லாம் என்று பார்க்கலாம் வாங்க…

Zodiac Signs, Horoscope, Astrology, 2025 Sani Transit Palan in Tamil

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். சனி 2 ஆம் வீட்டிற்கு அதிபதியாக 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இதன் விளைவாக, மகர ராசிக்காரர்கள் ஏழரைச் சனியிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சி கிடைக்கும். ஒரு ராசிக்கு ஏழரை மட்டும் முடிந்தால் அந்த ஏழரை காலத்தில் அந்த ராசிக்காரங்க என்னெல்லாம் கஷ்டப்பட்டார்களோ அதிலெல்லாம் முன்னேற்றம் கொடுப்பார்கள். வட்டியும், முதலுமாக கொடுக்க கூடியவர் சனி பகவான். ஆதலால் தான் சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்பார்கள்.

Tap to resize

Saturn Transit 2025, Saturn Transit 2025 Palan in Tamil

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி மிகவும் லாபகரமானதாக இருக்கும். சனி 7 மற்றும் 8 ஆம் வீட்டிற்கு அதிபதியாக 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இதன் விளைவாக, கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக இருந்த சனி தோஷம் நீங்கும் மற்றும் வாழ்க்கை படிப்படியாக முன்னேறும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலைகள் முடிவடையும்.

Sani Peyarchi 2025, 2025 Sani Peyarchi

ரிஷப ராசி

சனி ரிஷப ராசிக்கு 9 மற்றும் 10 ஆம் வீட்டிற்கு அதிபதியாக 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இதன் விளைவாக, ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மிகவும் லாபகரமானதாக இருக்கும். சனி கிரகத்தின் நேர்மறையான பார்வையால் தொழில் துறையில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகளுடன் நல்ல உறவு ஏற்படும் மற்றும் உங்களுக்கு முன்னேற்ற பாதை திறக்கும். வணிகர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு அடுத்த ஆண்டு மிகவும் நல்லது. முன்னேற்ற பாதை திறக்கும். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்ட வேலைகள் நிறைவேறும்

Latest Videos

click me!