Vastu Tips For Money With Tulsi Parikrama : சொந்த வீடு ஒன்று வேண்டும் என்பது அனைவரது கனவு. இதற்காக ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை சேமிக்கிறார். வாஸ்து சாஸ்திரத்தில் வீடு தொடர்பான சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் ரொம்வே முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்துபடி, செய்யும் காரியங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்து இருக்கும். மேலும் வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படும். வாஸ்து படி, வீட்டின் பிரதான வாயில் அல்லது பிரதான கதவு ரொம்பவே முக்கியமான இடமாகும். மேலும் பிரதான கதவானது வாஸ்து படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வாழ்க்கை மற்றும் வீடுகளில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வர வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும். எனவே, இந்த பதிவில் பணம் இரண்டு மடங்கு அதிகரிக்க வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் போதும்.
24
பணம் அதிகரிக்க வாஸ்து தீர்வு:
இந்து மதத்தில் துளசி செடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, வீட்டில் துளசி செடி வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. துளசி செடி பல உடல்நல பிரச்சினைகளை போக்கும். வாஸ்துபடி, துளசி செடியின் வேரை வீட்டின் பிரதான வாசலில் கட்டினால் செல்வம் பெருகும். இதுதவிர, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும். மேலும், இந்த தீர்வானது பணம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும்.
பிரதான நுழைவாயிலில் துளசி செடியின் வேரை கட்டுவதற்கு என சில வாஸ்து விதிகள் உள்ளன. எனவே, வாஸ்து படி, துளசி செடியின் வேர் காய்ந்த பிறகு அதை அகற்றிவிடுங்கள். இப்போது துளசி வேர் மற்றும் அரிசியை ஒரு சிவப்பு துணியில் கட்டி அதை உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயில் கட்டுங்கள்.
வீட்டில் துளசி செடி வைப்பது மிகவும் மங்களகரமாகும். இதை வீட்டில் வைப்பது எதிர்மறை ஆற்றல் நீங்கும். எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடியை வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் தான் நட வேண்டும். துளசி இலைகளை ஒருபோதும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பறிக்க வேண்டாம்.