Vastu Tips To Stop Husband And Wife Fight : திருமணத்திற்கு பிறகு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் பங்காளியாக மாறிவிடுகிறார்கள். ஆனால், சிலரது திருமண வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அதாவது சண்டை, சச்சரவுகள் ஏற்படும். ஆனால் நேரம் இந்த சண்டை சச்சரவுகள் மிகவும் தீவிரமடைந்து இருவரும் பிரியும் செல்லும் அளவுக்கு உள்ளன. பெற்றோருக்கு இடையே தினமும் சண்டைகள் நடப்பதால் குழந்தைகளின் மனநிலை தான் மோசமாக பாதிக்கப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி கணவன் மனைவிக்கு இடையே தினமும் சண்டைகள் வருகிறது என்றால் அதற்கு வாஸ்து குறைபாடு தான் காரணம். இத்தகைய சூழ்நிலையில், வாஸ்து சாஸ்திரத்தில் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை பின்பற்றி வந்தால் மட்டும் போதும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.