Today Astrology: இன்றைய ராசி பலன்! உங்கள் எதிர்காலத்தின் ரகசியம்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Published : Oct 29, 2025, 06:00 AM IST

இந்த ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்றைய நாளுக்கான விரிவான கணிப்புகளை வழங்குகிறது. தொழில், நிதி, குடும்பம், மற்றும் ஆரோக்கியம் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இதில் அடங்கியுள்ளன. 

PREV
112
மேஷம் (Aries)

மேஷ ராசி நேயர்களே,  இன்று உங்கள் ஆற்றலும் தன்னம்பிக்கையும் உச்சத்தில் இருக்கும் என்றால் அது மிகையல்ல. வேலை தொடர்பான புதிய முடிவுகளை எடுப்பதற்கு இன்று சரியான நேரம். பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையை கவனிப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் நிகழும். உடல்  நலத்தில்ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், உணவு பழக்கத்தில் கவனமாக இருப்பது அவசியம். புதிய திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மேற்கொண்டால் இன்று நல்ல பலன் தரக்கூடியவை. இன்றையநாளை முழுமையாக உற்சாகத்துடன் கழியுங்கள்.

212
ரிஷபம் (Taurus)

ரிஷப ராசி நேயர்களே, இன்று  நீங்கள் நிதி நிலைமையில் சிறந்த முன்னேற்றம் காணலாம். உங்கள் முயற்சிக்கு ஏற்ப ஆதாயமும் லாபமும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆக்கபூர்வமான சிநேகபூர்வமான உரையாடல்கள் நிகழும். வணிகம் மற்றும் தொழிலில் மெதுவான ஆனால் உறுதியான வளர்ச்சி காணப்படும். இன்று செலவை கட்டுப்படுத்துவது அவசியம். கடன் அல்லது செலவு தொடர்பான விஷயங்களில் அதிக கவனமாக இருங்கள். உடல்நல ஆரோக்கியத்தை பேண நல்ல உணவுப் பழக்கம் அவசியம். பொறுமை மற்றும் தன்னம்பிக்கை இன்று உங்கள் வெற்றியின் திறவுகோல். தன்னம்பிக்கையும் பொறுமையும் வெற்றிகளையும் சந்தோஷங்களையும் உங்கள் காலடியில் கொண்டு வந்து கொட்டும். வளர்ச்சிகான நல்ல நாள்.

312
மிதுனம் (Gemini)

மிதுன ராசிநேயர்களே,  இன்று தொடர்புகள் மற்றும் நெட்வொர்க்கிங் மூலம் புதிய வாய்ப்புகள் தோன்றும் நாள். கல்வி, ஆராய்ச்சி, அல்லது தொழில்நுட்ப துறையில் சிறந்த சாதனை ஏற்படும். காதல் உறவில் சிறு குழப்பங்கள் வந்தாலும் அதை  உங்களால் சமாதானமாக சமாளிக்க முடியும். மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசிம். உங்களின் புத்திசாலித்தனமும் பேசும் திறனும் இன்றைய வெற்றியின் முக்கிய காரணமாக இருக்கும். பயணங்கள் நன்மை தரலாம்.

412
கடகம் (Cancer)

கடக ராசி நேயர்களே, இன்று குடும்பம் தொடர்வான விஷயங்கள் உங்கள் கவனத்தை அதிகம் ஈர்க்கும். உங்கள் துணை உள்ளிட்ட வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை மதிப்பார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்படுவது மிகவும் அவசியம். தொழிலில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெற்றோர்கள் ஆரோசனைகள் ஆதரவாக இருக்கும். இன்று உங்களுக்கு உணவு மற்றும் ஓய்வில் சீரமைப்பு தேவை. ஆன்மீக வழிபாடுகளும் ஆலயம் செல்வதும் மன அமைதியை வழங்கும். நாள் முடிவில் உள்நிலை நிம்மதி மற்றும் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகள் மனதை தொடும்.

512
சிம்மம் (Leo)

சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்கள் தலைமைத்துவமும் தன்னம்பிக்கையும் வெளிப்படும் நாள். தொழிலில் புதிய யோசனைகள் வெற்றி தரும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். காதல் வாழ்க்கை உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். நண்பர்களுடன் இனிய நேரம் கழிக்க வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சோர்வு இருந்தாலும் உடற்பயிற்சியால் சமநிலை பெறலாம். உழைப்பால் உயர்வு உறுதி.

612
கன்னி (Virgo)

கன்னிராசி நேயர்களே,  இன்று துல்லியமும் ஒழுக்கமும் நேர்மையும் உங்களை வெற்றியடையச் செய்யும். வியாபாரம் மற்றும் தொழிலில் சிறிய மாற்றங்களும் கூட பெரிய பலன் தரும். உறவுகளில் நல்ல புரிதல் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. நேர்த்தியான செயல்முறை மற்றும் திட்டமிடல் மூலம் இலக்கை அடைய முடியும். உழைப்புக்கு மதிப்பும் பாராட்டும் கிடைக்கும் நாள்.

712
துலாம் (Libra)

துலாம் ராசி நேயர்களே, இன்று உறவுகள் மையமாக இருக்கும் நாள். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நல்லிணக்கம் ஏற்படும். தொழிலில் சமநிலை பேணுவது முக்கியம். நிதி விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். மன அமைதிக்காக சிறு ஓய்வு எடுங்கள். உங்களின் சுயபுத்தி இன்று பல சிக்கல்களை எளிதில் தீர்க்க உதவும். காதலில் இனிமை மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். சமாதானமான முடிவுகள் உங்களுக்கு நன்மை தரும். இன்று அட்டகாசமான நாள்.

812
விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசி நேயர்களே, இன்று ஆழமான சிந்தனைகள் உங்களை வழிநடத்தும். தொழிலில் சில ரகசிய வாய்ப்புகள் தோன்றும். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் நம்பிக்கை பெறுவீர்கள். காதல் உறவில் தீவிரமான உணர்வுகள் உருவாகும். மனஅழுத்தம் தவிர்க்க தியானம் உதவி செய்யும். ஆரோக்கியத்தில் நிம்மதியான உணவு பழக்கம் அவசியம். உங்களின் உள்ளார்ந்த சக்தி மற்றும் மன உறுதி இன்று மிகுந்த பலன் தரும்.

912
தனுசு (Sagittarius)

தனுசு ராசி நேயர்களே, இன்று பயணங்கள், கற்றல், மற்றும் புதிய அனுபவங்களுக்கான நாள். தொழிலில் விரிவாக்க வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி மற்றும் வெளிநாட்டு தொடர்புகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் சுதந்திர உணர்வு மேலோங்கும். ஆரோக்கியத்தில் உடற்பயிற்சிகள் நன்மை தரும். சில ஆபத்தான முடிவுகளை தவிர்க்கவும். சிரிப்புடன் நாளை எதிர்கொள்ளுங்கள்.திர்ஷ்டம் உங்களோடு உள்ளது.

1012
மகரம் (Capricorn)

மகர ராசி நேயர்களே, இன்று நீண்டகால இலக்குகளுக்கான திட்டமிடல் சிறப்பாக அமையும். தொழிலில் நிலையான வளர்ச்சி காணப்படும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்ப ஆதரவு உங்களுக்கு உற்சாகம் தரும். உடல் ஆரோக்கியத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகள் தொடர்பான  பிரச்சினைகள் வரலாம்கவனம் தேவை. பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி.

1112
கும்பம் (Aquarius)

கும்ப ராசி நேயர்களே, செமத்தியான யோசனைகள் மற்றும் சிந்தனைகள் இன்று உங்களை முன்னேற்றும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் நல்ல உறவு நிலவும். தொழிலில் புதிய மாற்றங்கள் நன்மை தரும். காதல் வாழ்க்கையில் சுதந்திர உணர்வு மேலோங்கும். ஆரோக்கியத்தில் மனதை இளமையாக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். புதிய தொடக்கங்களுக்கு இது சிறந்த நாள். தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.

1212
மீனம் (Pisces)

மீன ராசி நேயர்களே, இன்று ஆன்மீகம், கற்பனை, மற்றும் உளவியல் வலிமை அதிகரிக்கும். உங்கள் உணர்ச்சி ஆற்றல் பலருக்கும் உதவியாக இருக்கும். தொழிலில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். கலை, இசை, அல்லது எழுதுதல் போன்ற துறைகளில் சிறந்த திறன் வெளிப்படும். ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கியம். கனவுகளும் முன்னறிவும் இன்று வழிகாட்டும். இதயம் சொல்வதைக் கேட்டு முன்னேறுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories