Jupiter Transit in Poosam: அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் 4 ராசிகள்! இன்று நிகழும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் யாருக்கு ஜாக்பாட்?

Published : Jun 18, 2026, 11:14 AM IST

Astrology: நவக்கிரகங்களில் 'சுப கிரகம்' என்று அழைக்கப்படும் குரு பகவான் இன்று முதல் முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கவுள்ளார். குரு-பூச யோகம்' ஏற்பட்டு 4 ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தை கொடுக்கப்போகிறது.

PREV
15
குரு பகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி இன்று நிகழவுள்ளது. நவக்கிரகங்களில் 'சுப கிரகம்' என்று அழைக்கப்படும் குரு பகவான் இன்று முதல் முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கவுள்ளார். குரு-பூச யோகம்' ஏற்பட்டு 4 ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தையும், தொட்டதெல்லாம் துலங்கும் யோகத்தையும் பெறப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை பார்ப்போம்.

25
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி ஜாதகத்தின் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் நிகழ்கிறது. இதனால் உங்களுக்குப் பொருளாதார லாபங்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். செலவுகள் அதிகரித்தாலும், அதற்கு இணையான வரவு இருப்பதால் அனைத்தையும் எளிதாகச் சமாளிப்பீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

Astrology Predictions: ஜூலை 4 வரை நேரம் சரியில்லை! இந்த 6 ராசிகளுக்கு என்னென்ன கஷ்டங்கள் வரப்போகிறது தெரியுமா?

35
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் கைகூடி வரும். அரசு சார்ந்த திட்டங்கள் மற்றும் வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான திருப்பங்களும், பெரும் வெற்றியும் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேர்க்கும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும், பண வரவும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். மேலும் உங்கள் குடும்ப வாழ்க்கையில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்.

45
கன்னி

கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி செல்வ வளத்தை வாரி வழங்கவுள்ளது. புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்கள் நீண்ட நாள் கனவு நனவாகும். உடல் ஆரோக்கியம் சீராகும், மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய வாடிக்கையாளர்களும், லாபமும் பெருகும். முடங்கிக் கிடந்த அல்லது பாதியில் நின்ற காரியங்கள் அனைத்தும் இக்காலகட்டத்தில் எவ்வித தடங்கலும் இன்றி வெற்றிகரமாக முடியும்.

Shani Vakra Peyarchi: ஜூலை முதல் டிசம்பர் வரை சனியின் அதிரடி ஆட்டம்! கடன்கள் தீர்ந்து கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள் இதுதான்!

55
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் சிறப்பான பலன்களைத் தரும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, காதல் மற்றும் பிணைப்பு மேலும் வலுப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி மலரும். தொழிலில் உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய முக்கிய முடிவுகளையும், சாதகமான மாற்றங்களையும் இக்காலகட்டத்தில் காண்பீர்கள். பார்ட்னர்ஷிப் முறையில் தொழில் செய்பவர்களுக்கு இந்த காலகட்டம் மிக அனுகூலமான லாபத்தைத் தரும்.

Read more Photos on
click me!

Recommended Stories