இந்த ராசிக்காரர்கள் கிரகண யோகத்தின்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் வாழ்நாள் முழுவதும் சிக்கலை ஏற்படுத்தலாம். இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்கும் எந்த வேலையையும் செய்ய வேண்டாம், இல்லையெனில் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறும். பணப் பரிவர்த்தனைகளில் அதிக கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.