டாப் கியர் போட்டு உச்சத்துக்கு போகும் ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா? 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்!

Published : Jan 31, 2026, 08:04 PM IST

Today Rasi Palan in Tamil Predictions For All Zodiac Signs : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும் பிப்ரவரி மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
113
டாப் கியர் போட்டு உச்சத்துக்கு போகும் ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா? 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்!

2026 ஆம் ஆண்டு இப்போதுதான் பிறந்தது மாதிரி இந்ததது, ஆனால், அதற்குள்ளாக ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதமும் பிறந்துவிட்டது. காலமும் நேரமும் யாருக்காகவும் காத்துக்கொண்டிருக்காது என்பதற்கு இதுவும் ஒரு சான்று தான். ஆகையால் நேரத்தையும், காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் வீணடிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரங்களின் படி என்ன நடக்கிறதோ அதனை ஏற்று பரிகாரங்கள் செய்து அடுத்தடுத்து வேலைகளில் கவனம் செலுத்தி சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்வோம்.

தீராத கஷ்டங்களை தீர்க்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்! நினைத்தாலே முக்தி தரும் தலம்!

அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான பிப்ரவரி 1ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் பொதுவான பலன்கள் மட்டுமே. அவரவர் ஜாகத்தின் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் மாறுபடும்.

213
மேஷம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

மேஷ ராசி அன்பர்களே பிப்ரவரி 1ஆம் தேதியான இன்று உங்களுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். ஒரு சிலருக்கு உடல் நல பிரச்சனைகள் வரக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முதலாளி ஆவதற்காகவே பிறந்த 4 ராசிகள் யார் தெரியுமா? இவர்கள் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய மாட்டாங்க.!

313
ரிஷபம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

ரிஷப ராசி அன்பர்களே இன்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். இதன் மூலமாக வங்கி சேமிப்பு உயரும். திருமண வரன் தேடி வரும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும்.

413
மிதுனம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

மிதுன ராசி அன்பர்களே எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். அலுவலகத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் விட்டுக் கொடுத்து செல்ல குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நன்மை அளிக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

குரு பகவான் நிலையில் மாற்றம்.! சுயசார பலம் பெற்ற குருவால் 4 ராசிகளுக்கு நடக்கப்போகும் அதிசயம்.! | Guru Peyarchi 2026

513
கடகம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

கடக ராசி அன்பர்களே இன்று காதல் வாழ்க்கையானது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரம் செலவிட குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் வருகை இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலருக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படக் கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Budhan Peyarchi 2026: பிப்ரவரி முதல் வாரத்தில் புதன் பெயர்ச்சி.! செல்வந்தர்களாக மாறப்போகும் 4 ராசிகள்.!

613
சிம்மம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

சிம்ம ராசி அன்பர்களே இன்று ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகள் அதிகரிக்கும்.

713
கன்னி ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களது வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய வேலை கிடைக்கும் சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

813
துலாம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

துலாம் ராசி அன்பர்களே இன்று திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கேட்ட இடத்தில் கடனுதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

913
விருச்சிகம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

விருச்சிக ராசி அன்பர்களே வேலையில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். விலையுயர்ந்த பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். மன அமைதிக்கு தியானம் யோகா செய்வது நன்மை அளிக்கும். ஒரு சிலருக்கு கை, கால் வலி ஏற்படக் கூடும்.

1013
தனுசு ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

தனுசு ராசி அன்பர்களே முக்கிய முடிவுகளில் கவனம் செலுத்த வேண்டும். முடிவுகளை எடுப்பதற்கு முன்பு நன்கு யோசித்து எடுக்க வேண்டும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும். இறைவழிபாடு நன்மை தரும். அருகிலுள்ள முருகன் மற்றும் சிவன் கோயிலுக்கு சென்று வருவது நல்லது. பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். வேலையில் கவனமாக செயல்பட வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதையும், நேரம் தாழ்த்தி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

1113
மகரம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாள். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். முக்கிய முடிவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

1213
கும்பம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தடைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் பேரும் புகழும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

1313
மீனம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

மீனம் ராசி அன்பர்களே அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். ஒரு சிலருக்கு உடல் நல பிரசசனைகள் ஏற்படக் கூடும். கேட்ட இடத்தில் கடனுதவி கிடைக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். முருகப் பெருமான் வழிபாடு உங்களுக்கு வெற்றியை தரும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories