Top 3 Lucky Zodiac Signs for Mercury Jupiter Conjunctions 2026 : ஜோதிடத்தில் சக்தி வாய்ந்த அமைப்பு என்றால் அது புதன் மற்றும் குரு சேர்க்கை. புதன் – குரு சேர்க்கையால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இது 3 ராசிகளின் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்க போகிறது.
பொதுவாகவே கிரக நிலைகளின் இடப்பெயர்ச்சி அமைப்புகளின் அடிப்படையில் 12 ராசியினருக்கும் பலன்கள் அமைகிறது. கிரக நிலைகள் சாதகமான அமைப்பில் இருந்தால் நன்மையும், சாதகமற்ற நிலையில் இருந்தால் தீமையும் உண்டாகும். இந்த சூழலில் தான் ஏற்கனவே இருக்கும் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். அதற்கு புதன் மற்றும் குரு சேர்க்கையானது 3 ராசிகளின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது. அதற்கு முக்கிய காரணம் புதன் தொழில் காரகன். அதே போன்று குரு பகவான் செல்வ, செழிப்பு, பேர், புகழ், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரகனாக கருதப்படுகிறார். இந்த நிலையில் தான் இந்த 2 கிரகங்களின் சேர்க்கை கடகம், துலாம் மற்றும் கும்ப ராசியினருக்கு இரட்டிப்பு ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
24
கடக ராசிக்கான புதன் மற்றும் குரு சேர்க்கை பலன்:
இந்த 2 கிரகங்களின் சேர்க்கையானது கடக ராசிக்கு ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகத்தால் காசு, பணம் சேரும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு நல்ல நிறுவனத்திற்கு வேலை மாற்றம் ஏற்படக் கூடும். நீண்டநாள் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயரவு கிடைக்கப் பெறலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
34
துலாம் ராசிக்கான புதன் குரு சேர்க்கை பலன்
புதன் மற்றும் குரு சேர்க்கையானது துலாம் ராசியினருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக நடைபெறாமலிருந்த திருமணம் நடக்கும். ஒன்றுக்கும் அதிகமான வேலைகளை செய்து அதன் மூலமாக அதிகமாக வருமானம் பெறுவீர்கள். குடும்பத்துடன் ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கடன்கள் அடைபடும் யோகமான காலகட்டம். தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.
44
கும்ப ராசிக்கான புதன் – குரு சேர்க்கை பலன்
இந்த 2 கிரகங்களின் சேர்க்கையானது கும்ப ராசிக்கு பொற்காலத்தை கொடுக்கப்போகிறது. கடினமான வேலைகளை கூட எளிதாக முடித்துவிடுவீர்கள். கடன் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருத்த பணம் திரும்ப கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கூடும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலர் புதிய வீட்டிற்கு மாறும் சூழல் உருவாகும்.