மிகவும் மர்மமான ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்.. என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாதாம்..!

First Published | Jan 8, 2024, 12:13 PM IST

இந்த பதிவில் மிகவும் மர்மமான 4 ராசிக்கார்கள் யார் என்று பார்க்கலாம்.

ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குணங்கள் இருக்கும். சிலர் எப்போதும் வெளிப்படையாக பேசுவார்கள். ஆனால் சிலர் மர்மமான நபர்களாக இருப்பார்கள். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், நமது ஆளுமைகளை வடிவமைப்பதிலும், நமது நடத்தைகளில் செல்வாக்கு செலுத்துவதிலும் நமது ராசி முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இந்த பதிவில் மிகவும் மர்மமான 4 ராசிக்கார்கள் யார் என்று பார்க்கலாம்.

Image: Pexels

விருச்சிகம்

மிகவும் உணர்ச்சிவசப்படும் தீவிரமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். இந்த ராசியினர் மிகவும் சுதந்திரமானவர்கள். ஆனாலும் இவர்கள் தங்களின் உணர்ச்சிகளைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இதனால், மற்றவர்கள் இந்த ராசியினரின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்வது என்பது சவாலான விஷயம். காந்தத்தை போல் ஈர்க்கும் வசீகர தன்மை கொண்ட இவர்கள் மற்றவர்கள் மறைக்கும் உண்மைகளை வெளியே கொண்டு வரும் சாமர்த்தியம் கொண்டவர்கள். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் ரகசியம் மற்றும் மர்மங்களும் வழிநடத்துவார்களாம்.

Tap to resize

horoscope today Capricorn

மகரம்

விடாமுயற்சியும் லட்சியமும் கொண்ட மகர ராசிக்காரர்கள் வெற்றி மற்றும் சாதனைகளைத் தேடுவதில் மர்மமானவர்கள். தங்கள் உணர்வுகளைக் காட்டாமல் அல்லது புகார் செய்யாமல் கஷ்டத்தைத் தாங்கக்கூடியவர்களா இந்த ராசியினர் இருப்பார்கள். எனவே மகர ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் கனவுகளை நன்றாகப் பாதுகாத்துக்கொள்வதால், பல மர்மங்களை தங்களுக்குள் வைத்திருப்பார்கள். இதனால் அவர்கள் சிறந்து விளங்குவதற்குப் பின்னால் உள்ள உந்து சக்தியைப் பற்றி மற்றவர்கள் ஆர்வமாக உள்ளனர். 

Daily Aquarius Horoscope

கும்பம் : 

வாழ்க்கைக்கான விசித்திரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற கும்ப ராசிக்காரர்கள் மிகவும் மர்மமானவர்கள் திறந்த மனதுடன் சுதந்திரமான மனப்பான்மையுடன், தங்கள் அடுத்த நகர்வைப் பற்றி மற்றவர்களை யூகிக்க வைக்க முனைகிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் அறிவார்ந்த நோக்கங்களில் அதிகம் ஈடுபடுவார்கள். இதனால் தங்களை கணிக்க முடியாத ஒரு நபராக மாற்றுகிறார்கள். இவர்களிடம் பல மர்மங்கள் நிறைந்திருக்கும்.

மீனம்

ஜோதிட உலகில் அதிக கனவு காணப்வர்களாக மீன ராசிக்காரர்கள் உள்ளனர். இவர்கள்  ஒரு உள்ளுணர்வு இயல்புடன், பெரும்பாலும் தங்கள் சொந்த கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது இவர்கள் மனதில் என்ன உள்ளது என்பதை மற்றவர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனவே பல புதிர்களையும், மர்மங்களையும் தங்களுக்குள் மறைத்து வைத்திருப்பார்கள். மீன ராசிக்காரர்கள் ஆன்மீக மற்றும் கண்ணுக்கு தெரியா சக்திகளுடன் இணைவதற்கான உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர், இதனால் அவர்கள் மர்மமானவர்களாக இருக்கின்றனர். 

Latest Videos

click me!