குரு வக்ர நிவர்த்தி : இந்த ராசிகளுக்கு அமோக காலம்.. தொட்டதெல்லாம் வெற்றி தான்..

First Published | Jan 1, 2024, 6:46 PM IST

குருபகவான் நேற்று (டிசம்பர் 31) வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இந்த வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு யோகத்தை தரக்கூடியதாக அமைய உள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமின்றி, அவற்றின் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, என அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் குருபகவான் நேற்று (டிசம்பர் 31) வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இந்த வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு யோகத்தை தரக்கூடியதாக அமைய உள்ளது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு புதுப்பொலிவும் புத்துணர்வும் ஏற்படும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த காரியங்கள் கைகூடும். வீட்டில் திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். வேலை, வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.​​​​​​​

Tap to resize

சிம்மம் :

குரு பகவானால் உங்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. இதுவரை உங்களை தொடர்ந்து வந்த சிக்கள்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். குரு பகவான் உங்களுக்கு அனைத்து விதமான நற்பலன்களையும் வழங்கப்போகிறார். செல்வ செழிப்போடு வாழக்கூடிய காலமாக இது இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும்.

தனுசு :

தனுசு ராசியின் 5-வது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் இந்த ஆண்டு தனுசு ராசிக்கார்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தடைபட்டு அந்த காரியங்கள் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம் :

குரு பகவான் உங்கள் ராசியின் 3-வது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ஆண்டு உங்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் சந்தித்து பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். கடனில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தினருடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

Latest Videos

click me!