பகை உணர்வை மனதிற்குள்ளேயே வைத்திருக்கும் 5 ராசிக்காரர்கள்.. அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டங்களாம்..

First Published | Nov 10, 2023, 6:54 PM IST

ஜோதிடத்தின் படி எந்தெந்த ராசிக்காரர் நீண்ட காலம் வெறுப்புணர்வு அல்லது பகை உணர்வை மனதில் வைத்திருப்போம் ராசிகள் குறித்து பார்க்கலாம்..

நம் அனைவரின் வாழ்விலும் சில கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். சிலர் மீது கோபம் வெறுப்பு ஏற்படலாம்.. காலம் செல்ல செல்ல சிலருக்கு அந்த கோபம், வெறுப்பு ஆகியவை மறைந்துவிடும். ஆனால் ஒரு சிலர் தங்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பை அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். ஜோதிடத்தின் படி எந்தெந்த ராசிக்காரர் நீண்ட காலம் வெறுப்புணர்வு அல்லது பகை உணர்வை மனதில் வைத்திருப்போம் ராசிகள் குறித்து பார்க்கலாம்..

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பொதுவாகவே தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க தன்மையை கொண்டிருப்பார்கள். விஸ்வாச குணத்திற்காகவும் அவர்கள் அறியப்பட்டாலும், தங்களின் ராசி சின்னமான தேளின் குணம் இவர்களுக்கு இருக்கும். எனவே இவர்கள் தங்கள் வெறுப்புணர்வை ஒரு உறுதியுடன் வைத்திருக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். எனவே விருச்சிக ராசிக்காரர்களிடம் யாரேனும் தவறு செய்தால், அவர்களை மன்னிப்பதும் மறப்பதும் மிகவும் கடினமாக கருதலாம், கோபம், வெறுப்பை நீண்ட காலம் தக்கவைக்கும் சாமர்த்தியம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகம் இருக்கும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

Tap to resize

கடகம்

கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நபர்கள், மேலும் ஆழமான உணர்ச்சித் தொடர்புகளை உருவாக்கும் திறன் கொண்டிருப்பார்கள். இருப்பினும், இந்த உணர்ச்சி ஆழம் சில சமயங்களில் வெறுப்புணர்வை நீண்ட காலம் வைத்திருக்க வழிவகுக்கும், குறிப்பாக அவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதாகவோ அல்லது காயப்படுத்தப்பட்டதாகவோ உணர்ந்தால் அதை அவர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்கவே மாட்டார்கள். கடந்தகால குறைகளை அவர்கள் தங்கள் மனதிலேயே வைத்திருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் பிடிவாதமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள், மேலும் இந்த குணாதிசயம் வெறுப்புணர்வைத் தக்கவைக்கும் திறனைக் கொண்டுள்ளது. ரிஷபக்காரர்கள் தாங்கள் அவமதிகப்பட்டதாக உணர்ந்தால், அவர்களின் பிடிவாத குணம்  வெறுப்புணர்வை தக்க வைக்கும். எனவே கடந்த கால மனக்கசப்பு, வெறுப்பு ஆகியவறை அவர்கள் நீண்டகாலம் மனதிற்குள்ளேயே வைத்திருப்பார்கள். 

கன்னி ராசிக்காரர்களை காதலிக்கும் முன் இந்த 4 குணாதிசயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!
 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக அரவணைப்பு மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள் என்றாலும், அவர்கள் கர்வம் கொண்டவர்களாகவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருக்கலாம், இதனால் தங்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்திய சிறிய விஷயங்களை கூட அவர்கள் மறப்பது கடினம். அவர்களின் இந்த  கர்வம் காரணம் மற்றவர்கள் மீதான கோபத்தை வெறுப்புணர்வாக மாற்றும்.

மேஷம்

போட்டி மனப்பான்மை மற்றும் தைரியத்திற்கு பெயர் பெற்றவர்கள் மேஷ ராசிக்காரர்கள்.. தாங்கள் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பமும், தோல்வியின் மீதான வெறுப்பும் வெறுப்புணர்வை தூண்டும், குறிப்பாக யாராவது தங்கள் சாதனைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக அவர்கள் உணர்ந்தால் அதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல மாட்டார்கள். அந்த வெறுப்புணர்வை நீண்டகாலம் தங்கள் மனதிலேயே வைத்திருப்பார்கள்

Latest Videos

click me!