அடுத்த 235 நாட்கள் சனி பகவான் பாடாய்படுத்தப் போகிறார்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் இவைதான்..

First Published | Nov 7, 2023, 1:00 PM IST

சனி வக்ர நிவர்த்தியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்று விரிவாக பார்க்கலாம்.

சனி பகவான் மட்டும் தான் 9 கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கபப்டும் ஒரே கிரகம் ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

After 30 years, Saturn in Aquarius

அந்த வகையில் கடந்த ஜூன் 17-ம் தேதி கும்பராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று (நவம்பர் 4) வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே சனியின் இந்த வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் சனியின் இந்த வக்ர நிவர் த்தி சில ராசிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இந்த 235 நாட்களும் இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அதன்படி சனி வக்ர நிவர்த்தியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்று விரிவாக பார்க்கலாம்.

Tap to resize

விருச்சிகம் :

சனியின் வக்ர நிவர்த்தி நேரடியாக விருச்சிக ராசிக்காரர்களை பாதிக்கும். இதனால் மன உளைச்சல், குடும்பத்தில் சிக்கல் ஏற்படும். மேலும் தொழில், வியாபாரத்திலும் சவாலான சூழல் இருக்கும். எனவே நீங்கள் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையாக இருப்பது நல்லது.

கடகம் :

சனியின் நேரடி சஞ்சாரத்தால் கடக ராசிக்காரர்கள் பாதிக்கக்கூடும். தொழில், வியாபாரத்திலும் இந்த தாக்கம் இருக்கும். நிதி நெருக்கடி ஏற்படலாம். உறவுகளில் விரிசல் ஏற்படலாம். உடல்நிலை மோசமடையக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது நல்லது.

மீனம் :

சனியின் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களுக்கு ஏழரை சனி நடக்கும் நிலையில் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். உறவில் சிக்கல் ஏற்பட கூடும். தொழில் வியாபாரத்திலும் சிக்கல் இருக்கும். வேலையில் தடைகள் ஏற்படலாம்.

Leo daily rashifal

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். திருமண உறவில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். பொருளாதார விஷயங்களில் ஏற்ற இறக்கம் இருக்கும். வேலைகளில் தடை ஏற்படலாம். உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை 

Daily Aquarius Horoscope

கும்பம்

கும்ப ராசியில் சனி இருக்கும் நிலையில், அவர் ராசி அதிபதியாகவும் இருப்பதால் உங்க்களுக்கு சனி பகவான் அதிக தொல்லை தரமாட்டார். எனினும் சில உடல் நல பிரச்சனைகள் இருக்கக்கூடும் என்பதால் கவனம் தேவை.

Latest Videos

click me!