Mahadhan Rajyog 2025: சூரிய பகவான் உருவாக்கும் மகாதன யோகம்.! அளவில்லாத நன்மைகளைப் பெறப்போகும் 4 ராசிகள்.!

Published : Dec 14, 2025, 09:59 AM IST

Mahadhan Rajyog Lucky Zodiac Signs: 2025 ஆம் ஆண்டில் சூரிய பகவான் தனுசு ராசியில் குடியேறும் பொழுது மகாதன யோகம் உருவாகிறது. இதன் காரணமாக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
மகாதன யோகம் 2026

ஜோதிடத்தின்படி ஒரு கிரகம் குறிப்பிட்ட ராசியில் இருக்கும் பொழுது அல்லது மற்ற கிரகங்களின் பார்வையைப் பெறும் பொழுது அல்லது குறிப்பிட வீடுகளில் அமரும்பொழுது யோகங்கள் உருவாகின்றன. அந்த யோகங்களில் ஒன்றுதான் மகாதன யோகம். இது மிகுந்த செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியது.

டிசம்பர் 2025-ல் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். அப்போது குறிப்பிட்ட ராசிகளின் லக்னம் மற்றும் கிரகங்களின் அமைப்பை பொறுத்து இந்த யோகம் உருவாகி பலன்களை அளிக்க உள்ளது. இந்த யோகத்தால் பலன் பெறவுள்ள நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
கடகம்

கடக ராசியின் இரண்டாம் வீட்டின் அதிபதியான சூரிய பகவான் ஆறாம் வீடான தனுசு ராசியில் சஞ்சரிப்பது விபரீத ராஜயோகத்தின் பலன்களையும் கொடுத்து கடன் மற்றும் எதிரிகளின் பிரச்சனைகளையும் தீர்க்க உள்ளது. கடக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாத இறுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த பணம் கைக்கு வரும். கடனை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். நிதி நிலைமை வலுப்பெறும். போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் குவியும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

35
மேஷம்

மேஷ ராசியின் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் ஒன்பதாவது வீட்டில் தனுசு ராசியில் சஞ்சரிப்பது மிகுந்த பலன்களைக் கொடுக்கும். டிசம்பர் மாத பிற்பாதியில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தை அல்லது குருவின் ஆதரவால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திடீர் பணவரவு அல்லது மூதாதையர் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உயர்வு பதவி, கௌரவம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரலாம்.

45
துலாம்

துலாம் ராசிக்கு லாப ஸ்தானமான 11வது வீட்டின் அதிபதியாக விளங்கி வரும் சூரிய பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பது சுபமானதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குறுகிய பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் அல்லது நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

55
கும்பம்

கும்ப ராசியின் ஏழாம் வீட்டின் அதிபதியாக விளங்கி வரும் சூரிய பகவான் 11 வது வீடான லாப ஸ்தானத்திற்கு சஞ்சரிக்கிறார். இது திருமண உறவுகள் மற்றும் கூட்டுத் தொழில்கள் மூலம் லாபம் கிடைக்கும் என்பதை குறிக்கிறது. எனவே கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் மூலம் மிகப்பெரிய நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உதவியால் செல்வம் சேரும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் வட்டம் விரிவடையும். முதலீடுகள் மூலம் கணிசமான லாபம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories