
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணங்களும், இயல்புகளும் உண்டு. சில ராசியில் பிறந்தவர்கள் அதிக பொறுமையுடனும், நிதானத்துடனும் ஒவ்வொரு விஷயங்களை பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் சில ராசியில் பிறந்தவர்களுக்கு பொறுமை மிகக்குறைவு. அவர்கள் இயல்பாகவே வேகமான செயல்பாடுகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு பொறுமை என்பது மிகக் குறைவாக இருக்கும். ஒரு வேலையை உடனடியாக முடிக்கவில்லை என்றால், யாராவது தாமதமாக பதிலளித்தால் அல்லது மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு விரைவாக இல்லாவிட்டால் அவர்கள் எரிச்சலையும், பொறுமையின்மையும் வெளிப்படுத்துகிறார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் பொறுமையற்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்த ராசியை செவ்வாய் பகவான் ஆள்கிறார். இவர் ஆற்றல், வீரம் மற்றும் வேகம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாவார். மேஷ ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திலும் முன்னோடிகளாக செயல்பட விரும்புகின்றனர். இவர்கள் ஒரு விஷயத்தை தொடங்கி உடனே முடித்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இவர்கள் காத்திருத்தல் அல்லது மெதுவான செயல்முறைகளை வெறுக்கிறார்கள். ஒரு விஷயத்தில் ஆர்வம் வந்தவுடன் அது உடனடியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தாமதம் ஏற்பட்டால் கோபமடைந்து எரிச்சல் அடைவார்கள். எப்போதும் முதல் ஆளாக இருக்க விரும்புவதால் மற்றவர்களுக்காக காத்திருப்பது அல்லது பின்வாங்குவதற்கு தயாராக இருக்க மாட்டார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிக சுறுசுறுப்புடனும், விரைவான சிந்தனையும் கொண்டவர்கள். இவர்களை புதன் பகவான் ஆள்கிறார். புதன் பகவான் புத்திசாலித்தனம் மற்றும் தகவல் தொடர்பை குறைக்கும் கிரகமாவார். எனவே இவர்களுக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் தேவைப்படுகிறது. இவர்களின் முதல் எதிரி சலிப்புதான். ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதையோ ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதோ இவர்கள் விரும்புவதில்லை.
புதிய விஷயங்களை தேடி எப்போதும் அலைந்து கொண்டே இருப்பார்கள். இவர்களின் மனம் மிக வேகமாக செயல்படும். மற்றவர்கள் தங்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்கவில்லை என்றால் பொறுமையை இழந்து விடுவார்கள். ஒரே விஷயத்தில் நீண்ட காலம் கவனம் செலுத்துவது இவர்களுக்கு கடினமான காரியம் ஆகும். புதிய தகவல்களையும், மாறுதல்களையும் விரும்புவதால் மெதுவாக நடக்கும் விஷயங்களிலிருந்து விலகி விடுவார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் வலிமையான தலைமைப் பண்பு மற்றும் கவனத்தை ஈர்க்கும் இயல்பு கொண்டவர்கள். இவர்களை சூரிய பகவான் ஆள்கிறார். இவர்கள் அரசனைப் போல மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தங்கள் பேசுவதை அல்லது தங்கள் செயல்களை மற்றவர்கள் கவனிக்காமல் இருந்தால் அல்லது தங்கள் எதிர்பார்த்த மரியாதை கிடைக்க வில்லை என்றால் பொறுமையை இழந்து விடுவார்கள்.
இவர்கள் தங்கள் வழியில், தங்கள் தீர்மானித்த வேகத்தில் அனைத்தும் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் முடிவெடுக்க அதிக நேரம் எடுத்தால், அது இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் ஆற்றல் நிறைந்தவர்கள். மெதுவான மற்றும் தேக்கமான சூழல்கள் இவர்களுக்கு சலிப்பையும், பொறுமையின்மையையும் ஏற்படுத்தும்.
தனுசு ராசிக்காரர்கள் சாகசம், சுதந்திரம் மற்றும் உடனடி திருப்தியை விரும்புபவர்கள். இவர்களை குரு பகவான் ஆள்கிறார். இது அறிவு, சாகசம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். இவர்கள் பெரிய இலக்குகளை நோக்கி செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்களின் சுதந்திர உணர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது அல்லது சலிப்பை ஏற்படுத்தும் வகையில் நீண்ட நடைமுறைக்குள் அடைப்பது போன்ற விஷயங்கள் பொறுமையின்மையை ஏற்படுத்தும்.
உற்சாகம் இல்லாத அன்றாட வேலைகள் அல்லது சாகசங்கள் இல்லாத வழக்கமான நடைமுறைகள் இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் அடுத்த சாகசத்தை தேடி விரைவாக நகர்ந்து செல்வார்கள். சிறிய நுணுக்கமான வேலைகள் அல்லது அதிக நேரம் எடுக்கும் வேலைகளில் ஈடுபடும் பொழுது சோர்வடைந்து பொறுமையிழப்பாளர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)