Sani Peyarchi 2026: 2026-ல் சனி பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.!

Published : Dec 12, 2025, 10:50 AM IST

Sani peyarchi 2026 palangal: 2026 ஆம் ஆண்டு சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பலன்பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
Sani Peyarchi 2026 palangal

2026 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக கருதப்படுகிறது. நீதிமானாக விளங்கும் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் பொழுது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. தற்போது மீன ராசியில் பயணித்து வரும் அவர் 2026 ஆண்டு முழுவதும் மீன ராசியிலேயே பயணிக்க இருக்கிறார்.

2025 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்பத்தில் இருந்து வெளியேறி, மீனத்திற்குள் நுழைந்துள்ள அவர், 2026 ஆம் ஆண்டு முழுவதும் மீன ராசியிலேயே பயணிக்கிறார். மீன ராசியிலேயே அஸ்தமனமாவது, உதயமாவது, வக்ர கதியில் பயணிப்பது, நேர் கதிக்கு திரும்புவது என அனைத்தையும் நிகழ்த்த இருக்கிறார். சனி பகவானின் அடுத்த ராசி பயணமானது 2026 முடிவில் நிகழ இருக்கிறது.

இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டின் ஆரம்பம் முழுவதும் சனி பகவான் நேர்கதியிலேயே பயணித்து விபரீத ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார். இந்த ராஜயோகம் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
சிம்மம்

சனி பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் எதிர்பாராத லாபத்தையும், அளவில்லாத மகிழ்ச்சியையும் பெறுவார்கள். குழந்தைகள் மூலம் சுப செய்திகள் அல்லது மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். கைக்கு வந்து சேராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். சனி பகவானின் செல்வாக்கு காரணமாக நிதி நிலையில் வலுவான மாற்றங்கள் ஏற்படும். தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். சிறிதாக தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள்.

34
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த மாற்றமானது சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை உயர்த்தும். அலுவலகத்தில் பணி செய்து வருபவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குருவின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பவர்கள் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் இருந்த போட்டியாளர்கள், எதிரிகள் உங்களைக் கண்டு பயந்து விலகிச் செல்வார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் சமூகமான நிலை காணப்படும். சவால்களை எதிர்கொண்டு வெற்றியை ஈட்டுவீர்கள்.

44
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த மாற்றமானது சாதகமான சூழலை கொண்டுவரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை விலகி லாபம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு அமைதியும், சந்தோஷமும் அதிகரிக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாமதமாகி வந்த சம்பள உயர்வு கிடைக்கலாம். சவால்களை தைரியத்துடன் எதிர் கொண்டு வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories