Shukra Mangal Yuddh 2026: புத்தாண்டில் போரை தொடங்கும் எதிரி கிரகங்கள்.! 4 ராசிகள் தூக்கத்தை தொலைக்கப் போறீங்க.!

Published : Dec 12, 2025, 11:53 AM IST

Shukra Mangal Yuddh 2026 unlucky zodiac signs: புத்தாண்டின் தொடக்கத்தில் சுக்கினுக்கும், செவ்வாய்க்கும் இடையே போர் உருவாகிறது. இந்த கிரகப் போர் காரணமாக 4 ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்கள் கிடைக்க கூடும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
சுக்கிரன் செவ்வாய் போர் 2026

ஜோதிட கணக்கீடுகளின்படி ஜனவரி மாத தொடக்கத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஒன்றுக்கொன்று மிக அருகில் வரும். இந்த இரண்டு கிரகங்களும் எதிரி கிரகங்களாக அறியப்படுகின்றன. இந்த வானியல் நிலை சுக்கிரன் செவ்வாய் போர் என்று அழைக்கப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி இந்த போரானது ஜனவரி 6ஆம் தேதி காலை 8:19 மணிக்கு தொடங்கி, ஜனவரி 10ஆம் தேதி காலை 9:13 மணிக்கு இந்த போர் முடிவடைய இருக்கிறது. சுமார் 4 நாட்கள் நீடிக்கும் இந்த கிரகப் போரின் போது 4 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

ஜனவரியின் முதல் 10 நாட்கள் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுக்கிரன் மற்றும் செவ்வாயின் எதிர்மறையான பலன்கள் காரணமாக மன அழுத்தம் மற்றும் கோபம் அதிகரிக்கக்கூடும். சிறிய விஷயங்களுக்கு கூட அதிக கோபம் வரலாம். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் அதிகரிக்கும். எனவே இந்த நேரத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது மற்றும் அவசர முடிவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இரவில் தூக்கம் வராமல் தவிக்க நேரிடலாம். எனவே உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

35
ரிஷபம்

புத்தாண்டின் முதல் பத்து நாட்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு கட்டுப்பாடும், எச்சரிக்கையும் தேவைப்படும். குடும்ப விஷயங்களில் பதற்றம் அதிகரிக்கலாம். நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். கோபத்தை கட்டுப்படுத்துவது, பிறர் கூறும் நேர்மையான விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளும் திறனை மேம்படுத்துவது முக்கியம். தியானம், யோகா, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், உடற்பயிற்சி மூலம் மன அமைதியை பாதுகாக்கலாம்.

45
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் முதல் 10 நாட்கள் உறுதியற்ற தன்மை, உணர்ச்சி ரீதியாக பின்னடைவு தேவையற்ற சண்டைகளின் காலமாக இருக்கும். குடும்பம் அல்லது தொழில்களில் சிக்கல்கள் ஏற்படலாம். எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுதும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். குடும்பத்திலும், உறவினர்களிடமும் நல்லிணக்கத்தை பேணுவது சவாலாக இருக்கலாம். வார்த்தைகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். தனிப்பட்ட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

55
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மன அழுத்தம் நிறைந்ததாகவும், அதிக பதட்டம் நிறைந்ததாகவும் காணப்படும். வேலை அழுத்தம் மற்றும் பொறுப்புகள் காரணமாக மனசோர்வு அதிகரிக்கும். தொழில் ரீதியாக அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற வாக்குவாதங்கள், சண்டைகள், மோதல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வழக்கமான உடற்பயிற்சிகளுடன், சீரான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories