Surya Peyarchi 2026: ஜனவரியில் 3 முறை பாதையை மாற்றும் சூரிய பகவான்.! செல்வ செழிப்பை பெறப்போகும் 5 ராசிகள்.!

Published : Dec 12, 2025, 02:11 PM IST

Surya Peyarchi 2026 rasi palangal: 2026 ஜனவரி மாதம் சூரிய பகவான் தனது நிலையை மூன்று முறை மாற்ற இருக்கிறார். இது ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

PREV
16
சூரிய பெயர்ச்சி 2026

ஜோதிடத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறது. அவரது நிலையில் ஏற்படும் மாற்றமானது மக்களின் வாழ்க்கையில் நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 2026 ஜனவரி மாதம் மூன்று முறை சூரிய பகவான் தனது நிலையை மாற்றி இருக்கிறார். ஜனவரி 11 காலை 8:42 மணிக்கு அவர் உத்திராட நட்சத்திரத்தில் நுழைகிறார். ஜனவரி 14, 2026 மகர ராசிக்குள் நுழைகிறார். இது மகர சங்கராந்தி என்றும், தைமாதத்தின் பிறப்பாகவும் கருதப்படுகிறது. ஜனவரி 24 சனிக்கிழமை காலை 10:56 மணிக்கு உத்திராட நட்சத்திரத்தை விட்டு வெளியேறி திருவோண நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சியாக இருக்கிறார்.

26
மேஷம்

ஜனவரி மாதத்தில் நடக்கும் சூரியனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வழங்கும். அவர்கள் விரும்பிய வேலைகள் அல்லது தொழிலில் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவீர்கள். வேலையிடத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முதலீடுகள் அல்லது வணிக வாய்ப்புகள் லாபகரமானதாக மாறும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த காரியம் எடுத்தாலும் அதில் நிலைத்தன்மை கிடைக்கும்.

36
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை, வணிகம் மற்றும் நிதி விஷயங்களில் வளர்ச்சி சாத்தியமாகும். நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் உறவுகள் சுமூகமாக இருக்கும். குடும்பத்தினருடன் இருந்த பழைய சச்சரவுகள், சண்டைகள் இந்த காலகட்டத்தில் தீர்க்கப்படலாம். ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். மன அழுத்தங்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, கௌரவம் அதிகரிக்கும்.

46
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி பல துறைகளில் வாய்ப்புகளைத் தரும். நிதி மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். பண ஆதாயங்கள் இருக்கும். தொழிலில் வெற்றியை கிடைக்கக்கூடும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் சமநிலை நிலவும். தொழில் மாற்றங்கள் அல்லது புதிய பொறுப்புக்கள் நன்மை தரும். இந்த நேரத்தில் நிதானத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் முடிவுகளை எடுப்பது நல்லது.

56
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் தன்னம்பிக்கையும், செயல்களை செய்து முடிக்கும் ஆற்றல்களையும் வழங்கும். தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். நீங்கள் முன்னெடுக்கும் புதிய திட்டங்கள் உங்களுக்கு லாபத்தை தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன ஆற்றல் அதிகமாக இருக்கும். எந்த விஷயமானாலும் எடுக்கும் முயற்சிகளில் நிலைத்தன்மையையும், ஒழுக்கத்தையும் பராமரிப்பது நன்மை தரும்.

66
மகரம்

ஜனவரி 2026 இல் நடக்கும் சூரியனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை தரும். வேலை வாய்ப்பு மற்றும் வணிகத்தில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். முதலீடுகள் மற்றும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொறுமையுடனும், நிதானத்துடனும் முடிவுகளை எடுப்பது நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories