சனி-சுக்கிரன் சேர்க்கை மீன ராசிக்கு நல்ல வாய்ப்புகளைத் தரும். அதிர்ஷ்டம் கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திடீர் பண ஆதாயம், பதவி உயர்வு, சம்பள உயர்வு சாத்தியமாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வரலாம். சனி பகவான் உங்கள் ராசியிலும், சுக்கிர பகவான் லாப வீட்டிலும் அமர்கின்றனர். இதன் காரணமாக நிறைவேறாமல் இருந்த விஷயங்கள் நிறைவேறத் தொடங்கும். மூதாதையர் சொத்துக்கள் அல்லது முதலீடுகளில் இருந்து திடீர் லாபங்களை எதிர்பார்க்கலாம். ஆடம்பரத்தின் காரகரான சுக்கிர பகவானால் வீட்டில் பொன், பொருள், சேர்க்கை நிகழும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)