Rasi Palan 2026: கும்ப ராசியில் 5 ராஜயோகங்கள்.! 3 ராசிகளுக்கு பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!

Published : Jan 27, 2026, 11:49 AM IST

Planetary conjunction in Aquarius: பிப்ரவரி 2026-ல் சூரியன், செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒரே நேரத்தில் சனியின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைவதால் 5 ராஜயோகங்கள் உருவாகின்றன. இது சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். 

PREV
14
கும்ப ராசியில் 5 ராஜயோகங்கள்

பிப்ரவரி 3, 2026 அன்று, புதன் கும்ப ராசியில் நுழைந்து ராகு பகவானுடன் இணைகிறார். பின்னர், பிப்ரவரி 6-ல் சுக்கிரன், பிப்ரவரி 13-ல் சூரியன், பிப்ரவரி 23-ல் செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரக பெயர்ச்சிகள் லட்சுமி நாராயண யோகம், சுக்ராதித்ய யோகம், ஆதித்ய மங்கள யோகம், புதாதித்ய யோகம் மற்றும் சதுர்கிரஹி யோகம் போன்ற சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகங்களால் சில ராசிகள் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெற இருக்கின்றனர். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

24
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும். குறிப்பாக பிப்ரவரி 17-க்குப் பிறகு, சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் வேகம் பெறும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். புதிய வேலை அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல நேரிடலாம். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு தயிர் சாதம் தானமாக வழங்குவது நல்லது.

34
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் ஆறுதலான மாதமாக இருக்கும். இதுவரை தடைகளை மட்டுமே சந்தித்து வந்தவர்களுக்கு வாழ்வில் புது வசந்தம் வீசும். பிரச்சினைகள் முடிவடையத் தொடங்கும். வாழ்க்கை சரியான பாதைக்குத் திரும்பும். மன அழுத்தம் குறைந்து, அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பம் அல்லது அன்புக்குரியவர்களுடன் பயணம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். திடீர் நிதி ஆதாயத்திற்கான வழிகள் பிறக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

44
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் முன்னேற்றம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரும் மாதமாக இருக்கும். தொழில்முனைவோர் வருமானத்தில் விரைவான உயர்வை அனுபவிக்கலாம். நீங்கள் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஒரு திட்டத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அலுவலக பணியில் இருப்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவு வலுப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு மேலோங்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories