மீன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசியின் 11-வது வீடான லக்ன ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய சுப கிரகங்களின் சேர்க்கை உள்ளது. இதன் காரணமாக லாபம் கிடைக்கும் வாரமாக இருக்கும். முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த மனக்கசப்புகள் அனைத்தும் குறைந்து அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான பாதை திறக்கப்படும்.
பொதுவான பலன்கள்:
இந்த வாரம் சுப பலன்களைக் கொடுக்கும் வாரமாக இருக்கும். இதுவரை எதிர்ப்புகள் மற்றும் ஏமாற்றங்களை மட்டுமே சந்தித்து வந்தவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் அடிப்படை வசதி பெருகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். இதுவரை சோர்வாக காணப்பட்ட நீங்கள் இனி புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
நிதி நிலைமை:
லாப ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத தன வரவுக்கும் வாய்ப்பு உண்டு. திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். சொத்துக்கள், உயில் பிரச்சனைகள் தீர்ந்து லாபம் பெருகும். கடன் பிரச்சனைகள் குறையும். வறுமையில் அவதிப்பட்டு வந்தவர்கள் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.
வேலை மற்றும் தொழில்:
தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். இடம் மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழல் நிலவும். சுயமாக தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஆர்டர்கள் அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளின் நிம்மதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களில் தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்தியவர்கள் தாமாக விலகுவார்கள். சொத்துப் பிரச்சனைகள் சமூகமாக முடியும். திருமணத்திலிருந்து தடைகள் அகலும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள். பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் சொந்த மண்ணுக்கு திரும்புவார்கள்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
இந்த வாரம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. கால் வலி, மூட்டு வலி தொடர்பான சிறு உபாதைகள் தோன்றி தாமாகவே மறைந்து விடும். நேரத்திற்கு உறங்குவது, மன அழுத்தத்தை குறைக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். கடினமான பாடங்களைக் கூட எளிதாக புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். எழுதிப் பழகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் எதுவுமில்லை. எனவே தைரியமாக முடிவுகளை எடுக்கலாம். இருப்பினும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து அல்லது குடும்ப உறுப்பினரிடம் கலந்து பேசி எடுப்பது நல்லது.
பரிகாரங்கள்:
இந்த வாரம் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. ஆஞ்சநேயருக்கு சென்று வடை மாலை சாற்றி வழிபடலாம். விநாயகருக்கு வாழைப்பழம் சமர்ப்பிக்க வழிபடலாம். இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு உணவு தானம் வணங்குவது சிறப்பு.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)