This Week Rasi Palan: மகரத்தில் உருவாகும் தர்ம கர்மாதிபதி யோகம்.! இழந்த அனைத்தும் இந்த வாரம் கிடைக்கும்.!

Published : Jan 26, 2026, 04:02 PM IST

This Week Rasi Palan Makaram: ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
கிரக நிலைகள்:

மகர ராசி நேயர்களே, இந்த வாரம் ஒன்பதாவது வீட்டின் அதிபதியான புதன் பகவானும், பத்தாவது வீட்டின் அதிபதியான சுக்கிர பகவானும் இணைந்து ராசியில் நிற்பது தர்ம கர்மாதிபதி யோகத்தை வழங்குகிறது. 

இந்த யோகத்தால் இந்த வாரம் லட்சியங்களும், கனவுகளும் நிறைவேறும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் ஏற்பட்ட மன சங்கடங்கள் அனைத்தும் தீரும். விலகிச் சென்ற அனைத்தும் மீண்டும் கைக்கு கிடைக்கும்.

பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இந்த வாரம் நீங்கள் தொடங்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் வாரமாக இருக்கும். ஆரம்பத்தில் சிறு தடைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி உங்கள் வசமாகும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பெரியவர்களின் ஆசியும், வழிகாட்டுதலும் கிடைக்கும். தன ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் இந்த வாரம் எதிர்பாராத பண வரவு ஏற்படும். தைரியம், தெம்பு அதிகரிக்கும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். தன ஸ்தானத்தில் கிரகங்கள் இருப்பதால் வரவுகளும் செலவுகளும் சமமாகவே இருக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். ஷேர் மார்க்கெட், தங்கம், வெள்ளி போன்ற திட்டங்களில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். பணத்திற்காக பிறரை அண்டிப் பிழைத்த நிலை மாறும்.

வேலை மற்றும் தொழில்:

வேலை மற்றும் தொழில் இந்த வாரம் சூடு பிடிக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிப்பால் தொழிலுக்கு தேவையான வாகனங்கள் அல்லது பிறவற்றை செய்வீர்கள். வாடகை கட்டிடத்தில் தொழில் செய்து வருபவர்கள் சொந்த கட்டிடத்திற்கு மாறுவீர்கள்.

குடும்ப உறவுகள்:

குடும்ப உறவுகளில் இனிமை நிறையும். உறவினர்களிடையே இருந்த பகை நீங்கும். விலகிச் சென்ற அல்லது பிரிந்த உறவுகள் மீண்டும் இணையலாம். இல்லறம் சிறக்கும். திருமணத்திலிருந்த தடைகள் அகலும். திருமண வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். குழந்தை வரன் வேண்டி இருப்பவர்களுக்கு பிராப்தம் உண்டாகும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். வீடு மாற்றம் செய்வீர்கள்.

ஆரோக்கியம் மற்றும் கல்வி:

இந்த வாரம் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். சிறு சிறு உபாதைகள் வந்தாலும் அது அவை தாமாக நீங்கிவிடும். மனதில் புதிய தெம்பும், தைரியமும் ஏற்படும். உடல்நிலை தேறும். இதுவரை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

இந்த வாரம் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். ஆராய்ச்சி தொழில்நுட்பம் சார்ந்த மாணவர்களுக்கு சிறப்பான வாரம். படித்து முடித்தவர்களுக்கு நேர்காணலுக்காக அழைப்பிதழ் வரலாம். நேர்காணல் முடித்துக் காத்திருப்பவர்கள் வேலைக்கான அழைப்பிதழ் கிடைக்க பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:

இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் இல்லை. எனவே எந்த ஒரு முடிவையும் தைரியமாக எடுங்கள். இருப்பினும் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.

பரிகாரங்கள்:

காஞ்சி காமாட்சியம்மனை வழிபடுவது மிகவும் நல்லது. அம்மன் ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது மனவலிமையைத் தரும். இயலாதவர்களுக்கு கருப்பு உளுந்து அல்லது அன்னதானம் செய்வது கர்ம வினைகளைக் குறைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories