This Week Rasi Palan: குருவின் அருளால் தனுசு ராசிக்கு இந்த வாரம் எதிரிகளை துவம்சம் செய்யும் யோகம் கிடைக்கும்.!

Published : Jan 26, 2026, 03:23 PM IST

This Week Rasi Palan Dhanusu: ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
கிரக நிலைகள்:

தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் சனி மற்றும் குரு பகவானின் பார்வை இருப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் நடைபெறும் வாரமாக அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தள்ளிப்போன காரியங்கள் சுறுசுறுப்பு அடையும். வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

பொதுவான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் கிரகங்களின் சாதகமான நிலை காரணமாக நல்ல சம்பவங்கள் நடைபெறும். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகள் அல்லது வாடிக்கையாளர்கள் மூலம் சிறு பிரச்சனைகள் தலை தூக்கலாம். இருப்பினும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

நிதி நிலைமை:

நிதி நிலைமை இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் மேம்பாடு அடையும். பணப் பற்றாக்குறை என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது. பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய அளவிற்கு கடன்களை அடைக்க முடியாவிட்டாலும் சிறு கனன்களை அடைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

வேலை மற்றும் தொழில்:

வேலை மற்றும் தொழிலில் இந்த வாரம் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறலாம். அலுவலகத்தில் தொல்லை தந்தவர்கள், உங்களுக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். சக ஊழியர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். வேலைகளை செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு எண்ணம் ஈடேறும். கலை, ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான எடுக்கும் முயற்சிகள் கைகூடும். திருமணமாகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும் குடும்பத்துடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நட்பு வட்டம் பெருகும். அக்கம் பக்கத்தினருடன் நல்லிணக்கம் ஏற்படும்.

ஆரோக்கியம் மற்றும் கல்வி:

இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் உங்களை வாட்டி வதைக்கக்கூடும். குறிப்பாக வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வெளி உணவுகளை தவிர்க்கவும்.

மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். படிப்பில் அதிக கவனம் செலுத்தி முன்னேறிச் செல்வீர்கள். நேர்காணல் முடித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு வேலைக்கு சேர்வதற்கான அழைப்புகள் வரலாம்.

சந்திராஷ்டம நாட்கள்:

இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் எதுவுமில்லை. எனவே நீங்கள் தைரியத்துடன் எந்த காரியத்தையும் தொடங்கலாம். இருப்பினும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

பரிகாரங்கள்:

தனுசு ராசியின் அதிபதியான குரு பகவானை வணங்குவது நல்லது. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் அர்ச்சனை செய்து வழிபடவும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது மன அமைதி தரும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories