This Week Rasi Palan: கும்ப ராசியில் சனி பகவான் என்ட்ரி.! அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் இந்த வாரம் விடுதலை.!

Published : Jan 26, 2026, 04:25 PM IST

This Week Rasi Palan Kumbam: ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
கிரக நிலைகள்:

கும்ப ராசி நேயர்களே, ராசியின் அதிபதியான சனி பகவான் இரண்டாம் வீடான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த வாரம் பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூல் ஆகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழந்த சேமிப்புகளை ஈடு கட்டுவீர்கள்.

பொதுவான பலன்கள்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொடக்கத்தில் சில இழுபறிகள் இருந்தாலும் வார இறுதியில் காரியசித்திகள் உண்டாகும். தடைகள் அனைத்தையும் தாண்டி முன்னேற்றம் கிடைக்கும். தேவையில்லாத வழக்கு மற்றும் சிக்கல்களில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து முழுமையான நிவாரணம் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து மோதல்கள் அனைத்தும் விலகி மனம் அமைதி பெறும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். கரைந்து போன சேமிப்புகளை ஈடு கட்டுவதற்கான வழிகள் பிறக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம் என்பதால் பட்ஜெட்படி நடப்பது நல்லது.

வேலை மற்றும் தொழில்:

அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம். உங்கள் திறமையைக் கண்டு போனஸ் அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. கொடுத்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சியும் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

குடும்ப உறவுகள்:

குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படும். பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வெவ்வேறு ஊர்களில் பணிபுரிந்து வரும் தம்பதிகளுக்கு ஒரே ஊரில் பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

ஆரோக்கியம் மற்றும் கல்வி:

இந்த வாரம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் ஏழரை சனியின் காலம் என்பதால் கண், எலும்பு, நரம்பு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு அருந்துவது, உறங்குவது ஆகியவை அவசியம்.

மாணவர்களுக்கு கல்வியில் அதிக முயற்சி தேவைப்படும் வாரமாக இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்க்கவும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

சந்திராஷ்டம நாட்கள்:

இந்த வாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் எதுவும் இல்லை. எனவே முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுவது நல்லது.

பரிகாரங்கள்:

இந்த வாரம் முழுவதும் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு என் தீபம் ஏற்றி வழிபடுவது ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கும். இயலாதவர்களுக்கு அன்னதானம் அல்லது கருப்பு உளுந்து தானம் செய்வது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories