Lord Saturn has doubled his strength: ஜோதிடத்தின்படி சனி பகவான் இரட்டிப்பு பலத்தை அடைய இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். இவர் நாம் செய்யும் தவறுகள் மற்றும் கர்ம பலன்களுக்கு ஏற்ப நமக்கு பலன்களை அளிப்பதாக கூறப்படுகிறது. இவர் மெதுவாக நகரும் கிரகமாவார். ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை தங்குகிறார். இதன் விளைவாக அந்த ராசிகளின் மீது சனி பகவானின் தாக்கம் நீண்ட காலம் நீடிக்கிறது. தற்போது மீன ராசியில் அவர் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் கிரகங்களின் ராஜாவாக விளங்கும் சூரிய பகவான் செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
25
சனி மீது விழும் சூரியனின் பார்வை
இதன் காரணமாக சனி பகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் ஒன்று ஒருவர் சந்திக்க நேரிடுகிறது. பொதுவாக இருவரும் எதிரி கிரகங்களாக கருதப்படுகின்றன. இருப்பினும் சனி பகவான் மீது சூரியனின் பார்வை விழுவதால் சனிபகவான் இரட்டிப்பு பலத்தைப் பெறுகிறார். இதனால் அக்டோபர் 17 ஆம் தேதி வரை சனிபகவான் இரட்டிப்பு சக்தியுடன் விளங்குகிறார். இதன் விளைவாக சில ராசிகள் ஒவ்வொரு துறையிலும் மகத்தான வெற்றியையும், நிதி ஆதாயத்தையும் அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
35
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சூரியனின் பார்வை மிகவும் நன்மைகளை அளிக்க உள்ளது. ஏழாம் மற்றும் எட்டாம் வீடுகளில் அதிபதிகள் விதி ஸ்தானத்தில் அமைந்துள்ளனர். மேலும் சனியின் மீது சூரியனின் பார்வை இரு மடங்கு சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது. எனவே கடக ராசிக்காரர்களுக்கு இது நல்ல பலன்களை தரவுள்ளது. திருமணம் ஆகாத நபர்களுக்கு திருமண வரன்கள் தேடி வரலாம். உங்கள் தன்னம்பிக்கை, தைரியம், தொழில் வளர்ச்சி ஆகியவை அதிகரிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள், பதவி உயர்வு, நிதி ஸ்திரரத்தன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
துலாம் ராசியின் 12 ஆம் வீட்டின் வழியாக சூரியப் பெயர்ச்சி நடந்துள்ளது. மேலும் சனியின் மீது சூரியனின் பார்வை விழுவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு பல துறைகளிலும் வெற்றி கிடைக்க உள்ளது. இந்த காலகட்டம் செல்வ வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம், புதிய முதலீடுகளில் வெற்றி, சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சனியின் நீதி மற்றும் சூரியனின் ஆற்றல் ஆகியவை இணைந்து துலாம் ராசிக்காரர்களுக்கு தலைமைப் பொறுப்புகளை ஏற்க உதவும். சூரியனின் ஆற்றல் இவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். நிதி விஷயங்களில் எதிர்பாராத முன்னேற்றம் காணப்படும்.
55
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் இரட்டிப்பு பலம் பன்மடங்கு நன்மைகளைத் தர இருக்கிறது. சனி மூன்றாவது வீட்டில் இருப்பதால் அதை சூரியன் பார்க்கும்பொழுது இன்னும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. இதன் விளைவாக மகர ராசியில் பிறந்தவர்கள் சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதையைப் பெறுவீர்கள். மகர ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட காலமாக தடைபட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கலாம். இது அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும். தொழில், குடும்ப வாழ்க்கை, நிதி ஸ்திரத்தன்மை என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)