Astrology: எமனை நேருக்கு நேர் சந்திக்கும் புதன்.! செப்டம்பர் 19-க்குப் பிறகு இந்த 3 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!

Published : Sep 18, 2025, 12:26 PM IST

Budhan-Pluto Conjunction: செப்டம்பர் 19, 2025 புதன் மற்றும் புளூட்டோ ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரவுள்ளது.

PREV
15
புதன் - புளூட்டோ கிரகங்கள் சந்திப்பு

நவபஞ்சம ராஜயோகம் ஜோதிடத்தில் முக்கியமான கிரக சேர்க்கை ஆகும். இது கிரகங்கள் ஒருவருக்கொருவர் 120 டிகிரி கோணத்தில் அமையும் பொழுது உருவாகிறது. இந்த யோகமானது செல்வம், செழிப்பு, மரியாதை, வெற்றியை வழங்குவதாக அறியப்படுகிறது. புதன் பகவான் கிரகங்களின் இளவரசனாக அறியப்படுகிறார். அவர் அறிவு, வணிகம், தொடர்பு மற்றும் பயணங்களுக்கு காரகாராவார். அதேபோல் புளூட்டோ கிரகமானது மாற்றங்கள், ஆழமான உளவியல் மாற்றங்கள் மற்றும் செல்வத்தை குறிக்கிறது. இந்த இரண்டு கிரகங்களும் இணையும் பொழுது வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள், வணிகத்தில் முன்னேற்றம், ஆன்மீக வளர்ச்சி ஆகியவை ஏற்படும்.

25
நவபஞ்சம ராஜயோகம் 2025

ஜோதிடத்தின் படி செப்டம்பர் 19 ஆம் தேதி காலை 7:04 மணிக்கு புதனும், புளூட்டோவும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் சந்திப்பார்கள். புளூட்டோ தற்போது மகர ராசியில் பயணித்து வரும் நிலையில், புதன் பகவான் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார். புதன் பகவான் மாதத்திற்கு இரண்டு முறை தனது ராசியை மாற்றுகிறார். அதன் காரணமாக பிற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது குறிப்பிட்ட தொலைவில் அமைந்தோ ராஜயோகங்களை உருவாக்குகிறார்.

35
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களுக்கு வணிகத்தில் புதிய வாய்ப்புகள், பயணங்களின் மூலம் லாபம் மற்றும் தொடர்பு திறன்களில் முன்னேற்றம் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான பல வழிகள் திறக்கப்படலாம். நீங்கள் புதிய வேலை அல்லது பெரிய ஒப்பந்தங்களைப் பெறலாம். வணிகத் துறையில் பல லாபங்களை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். நல்ல முதலீடுகளில் சேமிப்பை தொடங்குவீர்கள்.

45
கன்னி

கன்னி ராசியில் புதன் லக்னத்திலும், புளூட்டோ ஐந்தாவது வீட்டிலும் சஞ்சரிக்கிறனர். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் மிகவும் நன்மைகளைப் பயக்கும். அனைத்து துறைகளிலும் விரிவான முன்னேற்றத்தை காண்பீர்கள். இந்த யோகம் தொழில் வளர்ச்சி மற்றும் நிதி லாபத்தை வழங்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். ஆன்மீக ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வணிகம் செய்து வருபவர்களுக்கு லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகுவதால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.

55
துலாம்

துலாம் ராசியில் புதன் பன்னிரண்டாவது வீட்டிலும், புளூட்டோ நான்காவது வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். இதன் காரணமாக நவபஞ்சம ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும். உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாரங்கள் கிடைக்கலாம். மூதாதையர் அல்லது பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, பணம் கைக்கு வந்து சேரலாம். பரம்பரை சொத்துக்கள் உங்கள் வாரிசுகளுக்கு கிடைக்கலாம். நீங்கள் வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டு, பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இது உங்கள் இலக்குகளை அடைய உதவி புரியும். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். இதன் காரணமாக மன நிம்மதி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories