Astrology: இந்த 4 மாதங்களில் பிறந்தவங்க மத்தவங்க மனசுக்குள்ள இருக்க விஷயத்தை ஈஸியா சொல்லிடுவாங்களாம்.!

Published : Sep 18, 2025, 01:46 PM IST

People born in these months can read others mind: ஜோதிடத்தின்படி சில மாதங்களில் பிறந்தவர்கள் பிறரின் மனதை எளிதில் அறிந்து கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருப்பார்களாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
மனதை படிப்பதில் கில்லாடிகள்

ஜோதிடத்தின்படி ஒருவரின் பிறந்த மாதம் அவர்களின் ஆளுமை, பண்புகள் மற்றும் தனித்துவமான திறன்களை வெளிப்படுத்த உதவுகிறது. சில மாதங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் ஆழமாக புரிந்து கொள்ளும் அசாதாரண திறனை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டுரையில் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்களுக்கு மனதை படிக்கும் திறன் இருக்கலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

25
பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் உள்ளுணர்வு கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு மனிதர்களின் உடல் மொழி, முகபாவனைகள் மற்றும் பேச்சின் தொனியை அவதானிக்கும் திறன் இயல்பிலேயே இருக்கிறது. எதிரில் உள்ளவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களின் முகத்தை வைத்தே துல்லியமாக கணித்து விடுவார்கள். மற்றவர்களின் ஆழ் மனதுடன் இயற்கையாக தொடர்பு கொண்டு, அவர்களை நன்றாக புரிந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளனர்.

35
மே

மே மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதை புரிந்து கொள்வதில் வல்லவர்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இவர்கள் பொறுமையாகவும், அமைதியாகவும் மற்றவர்களின் பேச்சை கேட்கும் திறன் கொண்டவர்கள். மற்றவர்களின் பேச்சை கூர்மையாக கேட்டு அதில் இருக்கும் உள் அர்த்தங்களை தெரிந்து கொள்வது இவர்களுக்கு கைவந்த கலை. இவர்களின் கூர்மையான உள் உணர்வு மற்றும் ஊடுருவிச் செல்லும் பார்வை மற்றவர்களின் ரகசியங்களை எளிதில் உணர்ந்து கொள்ள வைக்கிறது. உடல் மொழி மற்றும் செய்திகளை புரிந்து கொண்டு மற்றவர்கள் வெளிப்படுத்த தயங்கும் விஷயங்களையும் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.

45
நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மனதை படிக்கும் திறனில் மிகவும் தனித்துவமானவர்கள். இவர்கள் ஆழமான உள்ளுணர்வு மற்றும் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களின் மனதில் உள்ள மறைந்த எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் கண்டறியும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்கள் பிறரிடம் திறந்த மனதுடன் பேசி அவர்களிடம் இருந்து வார்த்தைகளை பிடுங்கி, அதன் மூலம் அவர்களை மனதை எளிதில் அறிந்து கொள்கின்றனர். மேலும் மற்றவர்களை உணர்ச்சி பூர்வமாக பேச வைத்து அதில் மறைந்திருக்கும் உண்மைகளை கண்டறிவார்கள். மற்றவர்களின் எண்ணங்களை, நேர்மையுடனும் உண்மைடனும் புரிந்து கொள்ள முயல்வார்கள்.

55
ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் தலைமைப் பண்பு நிறைந்தவர்களாகவும், மற்றவர்களை கவனமாக அவதானிக்கும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். மேலும் இவர்கள் பகுத்தறிவுடன் ஒரு நபரை அணுகி, அவர்களின் மனதில் உள்ள விஷயங்களை எளிதில் கண்டறிகின்றனர். மற்றவர்களின் உணர்ச்சிகளை உணர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவார்கள். இவர்கள் விவரங்களை கவனிக்கும் திறனால் மற்றவர்களின் மறைமுக எண்ணங்களையும், மனதில் இருக்கும் விஷயங்களையும் புரிந்து கொள்கிறார்கள். இவர்கள் மற்றவர்களை நடத்தையில் உள்ள மாற்றங்களை விரைவாக கவனிக்கும் திறமையும் கொண்டுள்ளனர்.

மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ளும் திறன் என்பது ஒரு அறிய பரிசாக கருதப்படுகிறது. இது மனித உறவுகளை மேம்படுத்துவதற்கும், தொழில் முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் உதவுகிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள மாதங்களில் பிறந்தவர்கள் இத்தகைய திறனை பயன்படுத்தி மற்றவர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்த முடியும். அதே நேரம் மற்றவர்களின் மனதை ஆழமாக படிப்பது என்பது உங்களுக்கு சில சமயங்களில் பின் விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories