ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. அப்போது பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப பலன்களை உருவாக்குகின்றன. நீதிமானாக விளங்கும் சனிபகவான் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்குவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் அமர்ந்துள்ளார். அவர் ஜூன் 2027 வரை மீன ராசியில் இருப்பார். இதுபோன்ற சூழலில் சனிபகவான் ஏதாவது ஒரு கிரகத்துடன் இணைவது அல்லது நேருக்கு நேர் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் புதன் பகவானை 180 டிகிரியில் சந்தித்து பிரதியுதி யோகத்தை உருவாக்க உள்ளார்.
செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு 11:15 மணிக்கு சனியும், புதனும் ஒருவருக்கு ஒருவர் 180 டிகிரியில் இருப்பார்கள். இதன் காரணமாக பிரதியுதி யோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் சனி மீன ராசியில் வக்கிர நிலையிலும், புதன் அதன் சொந்த ராசியான கன்னி ராசியிலும் இருப்பார்கள்.