Chandra Grahanam 2025: சில தினங்களில் உருவாகும் கிரகண யோகம்.! இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறீங்க.!

Published : Sep 04, 2025, 10:49 AM ISTUpdated : Sep 04, 2025, 10:50 AM IST

Grahan Yog 2025: இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது ஏற்படும் கிரகண யோகம் சில ராசிக்காரர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

PREV
16
கிரகண யோகம் 2025

செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் சந்திர கிரகணம் வானியல் முக்கியத்துவம் மட்டுமல்லாமல், ஜோதிடக் கண்ணோட்டத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது இந்த ஆண்டின் கடைசி மற்றும் முழு சந்திர கிரகணமாகும். சந்திர கிரகணத்தின் போது சந்திரன்-ராகு கும்ப ராசியில் கிரகண யோகத்தை உருவாக்குகின்றனர். அதே சமயம் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை கன்னி ராசியில் இருக்கும். சூரியன் மற்றும் கேது சந்திரன்-ராகுவுக்கு முன்னால் அதாவது ஏழாவது வீட்டில் அமைந்திருக்கும். இதன் காரணமாக இந்த கிரகங்கள் ஒன்றை ஒன்று நேரடியாக சந்திக்கும். இந்த தற்செயலான நிகழ்வு காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சவாலான சூழல் உருவாகலாம். இந்த கிரகண யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு சவாலாக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

26
ரிஷபம்:

இந்த சந்திர கிரகணத்தின் போது ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஏற்கனவே இருந்த பழைய பிரச்சனைகள், உடல்நலக் குறைவுகள் ஏற்படக்கூடும். இதனால் நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த கிரகண யோகம் உங்கள் நிதிநிலையை கடுமையாகப் பாதிக்கலாம். உங்கள் செலவுகள் அசாதாரணமாக அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக உங்களுக்கு மன அழுத்தமும் அதிகரிக்கலாம். தேவையற்ற பிரச்சனைகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளலாம். வேலை செய்யும் இடங்களிலும் தடைகள் ஏற்படலாம். எனவே இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது மிகுந்த நன்மைகளைத் தரும்.

36
மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு கிரகண யோகம் சில அசுப பலன்களைத் தரலாம். இந்த காலத்தில் குழந்தைகள் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை மற்றும் சச்சரவு ஏற்படலாம். உறவில் விரிசல்கள் வரலாம். இதன் காரணமாக நீங்கள் உணர்ச்சி ரீதியாக தனிமைப்பட்டதாக உணரலாம். வேலையில் அழுத்தமும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் முழுமையாக மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். இது உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தலாம். எனவே மிதுன ராசிக்காரர்கள் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது எதிர்மறை விளைவுகளைக் குறைக்கும்.

46
சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்திலும் திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்களுக்கு துணையுடனான உறவு சற்று பதட்டமாக இருக்கும். இது சண்டைகள் மற்றும் சில தவறான புரிதல்களுக்கு வழி வகுக்கலாம். உங்கள் துணையிடமிருந்து முழு கவனம் கிடைக்காததால் நீங்கள் ஏமாற்றம் அடையலாம். மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் உறவில் விரிசல் அடையலாம். இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையுடனும், புரிதலுடனும் செயல்பட வேண்டியது அவசியம். சந்திர கிரகணம் முடிந்த பிறகு துர்க்கை அல்லது அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

56
துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் பரபரப்பாகவும் மன அழுத்தம் நிறைந்ததாகவும் இருக்கும். வேலையில் தாமதங்கள் அல்லது இடையூறுகள் ஏற்படலாம். ஒரே நேரத்தில் பல பொறுப்புகள் வந்து சேரும். இது உங்களை மிகவும் குழப்பமடைய செய்யலாம் நெருங்கிய நபர்கள் கூட உங்களுக்கு எதிராக சதி செய்யக்கூடும் எனவே தொழில் செய்து வருபவர்கள், வணிகத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பலவீனத்தை பிறர் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. எனவே எதிரிகளுக்கு உங்கள் திட்டங்கள் தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பது நல்லது.

66
கும்பம்:

கும்ப ராசியில் கிரகண யோகம் ஏற்படுவதால் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். வாகனங்களில் செல்லும் பொழுது விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். இது உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தை விளைவிக்கும். வேலை செய்து வருபவர்களுக்கு சில சவாலான தடைகள் ஏற்படலாம். பெரிய இழப்புகளை தவிர்ப்பதற்கு, நீங்கள் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும். சுற்றியுள்ள சூழ்நிலைகளை கவனிக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories