
ஜாதகத்திலும், ஜோதிடத்திலும் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனி பலன்கள் உண்டு. அதில் சில ராசிகள் மட்டும் கைராசிக்கே பெயர் பெற்றவர்கள் எனப் பேசப்படுகிறார்கள். இவர்கள் ஒரு ரூபாயை தொட்டுக்கொடுத்தால் அது உடனே ரூ.1 லட்சமாக மாறுமாம். எவ்வளவு தடைகள் வந்தாலும், இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வம் தானாக வந்து சேரும். அது இவர்களுடைய சுபகிரக பலனாலும், ஜாதகத்தில் உள்ள யோகங்களாலும் நிகழ்வதாக ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடின உழைப்பாளிகளான ரிஷப ராசிகாரர்கள், எதை தொட்டாலும் அது துலங்கும். ஒரு திட்டத்தை அவர்கள் தீட்டினால் அது லாபத்தின் வாசலுக்கே கூட்டிச்செல்லும். ரிஷப ராசிக்காரர்கள் கடவுள் கொடுத்த நிதானமும் உழைப்பும் அதிர்ஷ்டமும் கொண்டவர்கள். இவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் ஆதிக்கம் செலுத்துவதால், செல்வம் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் எப்போதும் மிகுந்திருக்கும். ரிஷப ராசியினர் எந்த தொழிலில் தலையிட்டாலும் அதில் பணம் பெருகும். நிலம், வீடு, நகை, பண்ணை, வாகனம் போன்ற சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவர்களுக்கு வருமானம் தானாக வந்து சேரும். கைராசியில் சண்முக யோகம் இருப்பதால் குறைந்த முதலீட்டிலேயே பெரிய வருவாய் கிடைக்கும் என்கிறது ஜோதிட நூல்கள்.
ஒரு ராசியில் சூரியன் அதிக்கம் செலுத்தும் போது அந்த ராசி நேயர்கள் உச்சிக்கு செல்வர். சூரியன் ஆதிக்கம் செலுத்தும் சிம்ம ராசிக்காரர்கள் பிறப்பிலேயே ராஜயோகம் பெற்றவர்கள் என்றால் அது மிகையல்ல். அவர்களை செல்வமும் அதிர்ஷ்டமும் பின் தொடர்ந்து செல்லுமாம்.சிம்ம ராசிக்காரர்கள் ஒரு திட்டத்தை தொடங்கினால் அது லாபத்தை மட்டுமே கொடுக்குமாம். வியாபாரம், அரசியல், மேலாண்மை, கல்வி போன்ற துறைகளில் இவர்களுக்கு பேரும் பணமும் புகழும் ஒரே நேரத்தில் கிடைக்குமாம். கைராசியில் குபேர யோகம் மிக வலிமையாக இருப்பதால், எதிர்பார்க்காத இடத்திலிருந்து பெரிய தொகை இவர்களிடம் வந்து சேரும்.
ஜோதிட ரீதியாக தனுசு ராசி நேயர்களை குரு வழிநடத்துவார். ஏன் என்றால் குரு ஆதிக்கம் கொண்ட தனுசு ராசியினர் அறிவிலும், அதிர்ஷ்டத்திலும் சிறந்தவர்கள். அவர்களின் கைராசியில் மஹாலட்சுமி சக்கரம் போல காட்சியளிக்கும் அடையாளங்கள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அதனால் எத்தனை தடைகள் வந்தாலும் முடிவில் இவர்களுக்கே வெற்றி கிடைக்குமாம். தனுசு ராசிக்காரர்கள் பங்குச் சந்தை, முதலீடு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற வழிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமான பணத்தை சம்பாதிப்பார்கள். இவர்களின் கைராசியில் தனதான்ய யோகம் வலுவாக இருப்பதால், ரூ.1 முதலீடு செய்தாலும், அது ரூ.1 லட்சமாக அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஜாதகத்தில் சுக்கிரன், குரு, சூரியன் மற்றும் சந்திரன் பார்வை பலமாக இருந்தால் அது அதிர்ஷ்ட ஜாதகமாகும். இவர்களின் ஜாதகத்தில் லக்னத்தில் சுபகிரகங்களின் பார்வை, சுக்கிரன்–குரு இணைவு, சூரியன்–சந்திரன் வலிமை ஆகியவை கைராசியிலும் செல்வ ரேகைகளிலும் வெளிப்படும். அதனால் இவர்களுக்கு பணம் சம்பாதிக்க உழைப்புடன் கூடிய அதிர்ஷ்டம் கைகொடுக்குமாம்.
ரிஷபம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் தான் கைராசிக்கு பேர் போனவர்கள் என்கிறது ஜோதிடம். ஒரு ரூபாய் கொடுத்தாலும் அது பெருகி லட்சங்களாக மாறும். இவர்களின் கைராசி என்பது செல்வத்தை இழுக்கக்கூடிய காந்தம் போல செயல்படும் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். அதனால் இவர்களின் வாழ்வில் செல்வம் குறைவதில்லை; தொடர்ந்து பெருகிக் கொண்டே இருக்கும்.