Astrology: சில தினங்களில் நடக்கப்போகும் சனி பெயர்ச்சி.! இந்த 3 ராசிகளுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தான்.!

Published : Sep 22, 2025, 02:24 PM IST

Sani Peyarchi 2025: அக்டோபர் மாதத்தில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். சனி பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வழங்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. கிரகங்களின் இந்த இயக்கத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவராக கருதப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. சனி பகவான் தனது சுழற்சியை முடிக்க 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திர சுழற்சியை முடிப்பதற்கு 27 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைய இருக்கிறார்.

25
பூரட்டாதி நட்சத்திரக்குச் செல்லும் சனி பகவான்

சனிபகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். அக்டோபர் மூன்றாம் தேதி இரவு 9:49 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நேர்மறையான மாற்றங்களையும், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான மாற்றங்களையும் பெறுகின்றனர். பூரட்டாதி நட்சத்திரம் குரு பகவானின் ஆதிக்கத்தின்கீழ் வருகிறது. இதன் காரணமாக இங்கு சனியின் கடுமை சற்று தணிந்து, ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு உகந்ததாக அமைகிறது. சனிபகவானின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அடையப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
1.கடகம்

சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திரப் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வழங்க உள்ளது. கடக ராசியின் ஒன்பதாவது வீட்டிற்கு சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி நடக்க உள்ளது. இதன் காரணமாக அவர்கள் திடீர் அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர். அவர்கள் எந்த துறையை எடுத்தாலும் அதில் மகத்தான வெற்றியை பெறுவார்கள். தொழில் வாழ்க்கையில் புதிய உச்சங்களை எட்டுவார்கள்.

சிறிதாக தொழில் செய்து வருபவர்கள் தொழிலை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகளுக்கு தொழிலில் முன்னேற்றங்கள், நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். பொருளாதார நிலை மேம்படுவதால் முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

45
2.கும்பம்

சனிபகவானின் பூரட்டாதி நட்சத்திர பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலன்களை தரும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள். கும்ப ராசிக்காரர்களின் பேச்சு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமையும். இதன் காரணமாக அவர்கள் தொழிலில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள்.

திருமணமான தம்பதிகளுக்கு இந்த காலகட்டம் மகிழ்ச்சியாக இருக்கும். பிரிந்து சென்ற கணவன் மனைவி மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகள் வழியாக சுப செய்திகள் கிடைக்கலாம். வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதிய வாகனம், புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டமும் கைகூடும்.

55
3.மீனம்

சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி காரணமாக மீன ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். நீதிமானாக விளங்கும் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்து, மீன ராசியின் லக்ன வீட்டில் அமர்கிறார். இதன் காரணமாக மீன ராசியின் தொழில் மற்றும் வணிகம் சிறக்க இருக்கும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.

பெரிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அதை நீங்கள் வெற்றிகரமாக முடித்து மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் அணுகுமுறையால் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இந்த காலகட்டத்தில் பொருளாதாரம் உயர்வதால் முதலீடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வேலைகளுக்காக காத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories