Astrology: குருவுடன் கூட்டணி அமைத்த சுக்கிரன்.! இரு சுப கிரகங்களின் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள்.!

Published : Sep 22, 2025, 01:41 PM IST

Ardha Kendra Yog: ஜோதிடத்தின்படி செப்டம்பர் 25 ஆம் தேதி குரு மற்றும் சுக்கிரன் இருவரும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் அமைவதால் அர்த்த கேந்திர யோகம் உருவாகிறது. இதன் காரணமாக மூன்று ராசிகளில் பிறந்தவர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். 

PREV
15
அர்த்த கேந்திர யோகம்

வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அந்த வகையில் குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். தற்போது அவர் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அவர் ஒரு வருடம் இந்த ராசியில் இருக்கும் பொழுது பிற கிரகங்களுடன் இணைந்து அல்லது பிறகிரகங்களுடன் குறிப்பிட்ட தொலைவில் அமைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில் செப்டம்பர் 25 ஆம் தேதி சுக்கிரனுடன் இணைந்து அவர் அர்த்த கேந்திர யோகத்தை உருவாக்குகிறார்.

25
குரு-சுக்கிரன் சேர்க்கை

செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 5:16 மணிக்கு குருவும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் அமைந்திருப்பார்கள். இந்த சிறப்பு நிகழ்வு காரணமாக அர்த்த கேந்திர யோகம் உருவாகிறது. சுக்கிர பகவான் தற்போது கேதுடன் இணைந்து சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். குரு மற்றும் சுக்கிரன் இருவரும் சுப கிரகங்களாக அறியப்படுவதால் அர்த்த கேந்திர யோகம் மிகவும் மங்களகரமானதாகவும், சிறப்பான பலன்களை தரும் யோகமாகவும் அறியப்படுகிறது. குருபகவான் தேவர்களின் குருவாகவும் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாகவும் வணங்கப்படுகின்றனர்.

35
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனின் அர்த்த கேந்திர யோகம் பல துறைகளில் நன்மை பயக்க உள்ளது. குரு லக்னத்திலும், புதன் நான்காவது வீட்டிலும் இருப்பதால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை இணக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.

நிலம், கட்டிடங்கள், சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். குருவின் ஆசியால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சட்டம் மற்றும் நீதிமன்ற விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

45
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் மற்றும் குருவின் அர்த்த கேந்திர யோகம் மிகவும் நன்மை பயக்கும். சுக்கிரன் தற்போது லக்னத்தில் இருக்கிறார். சுக்கிர பகவான் அழகு, செல்வம், ஆடம்பரம், பொன், பொருள் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் அதிக செல்வாக்கை பெற இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வெற்றி கிடைக்கும். 

தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கணிசமாக அதிகரிக்கும். பெரிய முடிவுகளை எந்தவித தயக்கமும் இன்றி தைரியமாக எடுத்து, அதில் வெற்றியும் காண்பீர்கள். உங்களின் தைரியமான நடவடிக்கைகளைப் பார்த்து எதிரிகளும், தொழிலில் இருந்த போட்டியாளர்களும் விலகி ஓடுவார்கள். தொழில் வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தும் செல்வ செழிப்புடன் மாறும்.

55
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனின் அர்த்த கேந்திர யோகம் முக்கியமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். இந்த காலம் அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும், புதிய வாய்ப்புகளுடனும் இருக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுவதால் எதிர்பாராத பண வரவு கிடைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் ஒவ்வொன்றாக முடிவடையும். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் முடிவு எடுக்கும் திறன்கள் அதிகரிக்கும். 

பெரிய மற்றும் முக்கியமான பணிகளை எளிதாக நிறைவேற்றி வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணங்கள் மகிழ்ச்சியையும், புதிய அனுபவங்களையும், நிதி ஆதாயங்களையும் தரும். மேலும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளுக்கும் பிறக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories