Astrology: ராகுவால் அக்டோபரில் அடிக்க போகுது ஜாக்பாட்.! இந்த 3 ராசிகளுக்கும் சொத்து சுகம் சேரப்போகுது.!

Published : Sep 22, 2025, 01:04 PM IST

அக்டோபர் மாதம் ராகுவின் சஞ்சாரத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவர்கள் நீண்ட நாள் கனவான வீடு, நிலம், மற்றும் வாகனம் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். சொத்து தொடர்பான சிக்கல்கள் தீர்ந்து மகிழ்ச்சி பெருகும்.

PREV
14
எதிர்பாராத அதிர்ஷ்டம் கதவை தட்டும்

அக்டோபர் மாதம் ஜோதிட ரீதியாக பலருக்கும் புதிய வாய்ப்புகளைத் தரும் மாதமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ராகுவின் சஞ்சாரம் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை உருவாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமாக ராகு மனதில் குழப்பத்தையும், அலைபாய்ச்சலையும் தருவதாக கருதினாலும், சில நேரங்களில் அது எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், சொத்து சுகத்தையும், வாகன வசதியையும் தரக்கூடியதாகும். இந்த அக்டோபரில் மூன்று ராசிக்காரர்களுக்கு அந்த வகையான அதிர்ஷ்டம் கிட்டப்போகிறது.

24
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் சிறப்பானதாக அமைய இருக்கிறது. ராகுவின் பாதிப்பு காரணமாக நீண்ட நாட்களாக சிக்கித் திரிந்த நிலம், வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். குடும்பத்தில் புதிய சொத்து சேர்க்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறும். புது வீடு வாங்குதல், பழைய வீட்டை புதுப்பித்தல் அல்லது நிலம் தொடர்பான முதலீடு செய்யும் வாய்ப்பு வரும். மேலும், அரசாங்கம் சார்ந்த அனுகூலங்கள், வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வருமானம் கிடைப்பதால் சேமிப்பு அதிகரிக்கும். அந்த சேமிப்பே சொத்து சேர்க்கைக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைபெற்று, வீடு வாகனம் தொடர்பான கனவுகள் நனவாகும் காலமாகும்.

34
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்படும் காலமாகும். ராகுவின் பலனால் சொத்து, வாகனம் தொடர்பான சிக்கல்கள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக, வழக்கில் சிக்கித் திரிந்த நிலம், வீடு தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உங்களுக்கே சாதகமாக அமையும். திடீரென கிடைக்கும் வருமானம் மூலம் வாகனம் வாங்கும் வாய்ப்பு வரும். குடும்பத்தில் புதிய வீடு அமைக்க நினைப்பவர்கள் அதற்கான அடித்தளத்தை வைக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகள் தொடர்பான மகிழ்ச்சி கூடும். வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அல்லது உறவினர்களின் உதவி மூலம் சொத்து சேர்க்கை எளிதாகும். அரசாங்கம் சார்ந்த வேலைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வீடு, நிலம், புது வியாபாரம் தொடங்குவதற்கான பிளான் வெற்றிகரமாக முன்னேறும்.

44
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சொத்து சுகம் அள்ளித்தரும் மாதமாக அமையும். ராகுவின் சாதக பலன்களால் வாகனம் வாங்கும் யோசனை நனவாகும். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் மூலம் வீட்டில் புது சொத்து சேர்க்கை சாத்தியமாகும். நீண்ட நாட்களாக நிதி பற்றாக்குறை காரணமாக தள்ளிப்போன சொத்து தொடர்பான வேலைகள் விரைவில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழ்நிலை உருவாகி, புது வீடு கட்டும் யோசனை ஆரம்பிக்கும். பங்குச்சந்தை அல்லது முதலீடு மூலம் கிடைக்கும் லாபம் நிலம் வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். மேலும், ராகுவின் பலனால் அரசாங்க அனுகூலம் கிடைக்கும். வீட்டில் புது வாகனம் சேர்ந்து, குடும்ப உறவுகள் மேலும் வலுவடையும்.

Read more Photos on
click me!

Recommended Stories