Numerology: உங்கள் வீட்டு மருமகள் இந்த தேதியில் பிறந்தவரா? அப்படியானால் உங்கள் வீட்டில் இனி செல்வம் பெருகும்!

Published : Jan 06, 2026, 03:29 PM IST

Marriage Lucky Dates Numerology: எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவும், மகாலட்சுமியின் அம்சமாகவும் விளங்குவார்களாம். அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
எண் கணிதம்

எண் கணிதத்தின்படி ஒரு நபரின் பிறந்த தேதியானது அவர்களின் ஆளுமை, இயல்பு, சிந்தனை, உறவுகளை பராமரிக்கும் திறன் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. சில தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் புகுந்த வீட்டிற்கு செல்வத்தையும், பெருமையையும் கொண்டுவரும் மகாலட்சுமியின் அம்சமாக விளங்குவார்களாம். இவர்கள் சிறந்த மனைவிகளாகவும், பொறுப்பான மருமகள்களாகவும் விளங்குவார்களாம். அவர்களின் நடத்தை மற்றும் குணங்கள் மூலம் வீட்டிற்கு அமைதி, மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வருவார்களாம். அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
ரேடிக்ஸ் எண் 2

ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ராசி எண் 2 ஆகும். எண் 2 சந்திரனுடன் தொடர்புடையது. இது மனம், உணர்ச்சிகள் மற்றும் உணர்திறனை குறிக்கிறது. ராசி எண் 2 உள்ள பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். புரிந்து கொள்ளும் திறனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் கணவர் வீட்டாருடன் இணக்கமான உறவை பேணுவார்கள். அனைவரையும் அன்பாக பராமரித்து வீட்டுச் சூழலை பராமரிப்பார்கள். குடும்பத்தினரின் தேவைகளை விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் இவர்களிடம் அதிகம் உண்டு. இவர்கள் நிதி சார்ந்த பிரச்சனைகளை திறம்பட கையாண்டு புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள்.

35
ரேடிக்ஸ் எண் 3

எந்த மாதத்திலும் 3,12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ராசி எண் மூன்றாகும். இந்த எண் குரு பகவானால் ஆளப்படுகிறது. இது அறிவு, நேர்மறை சிந்தனை மற்றும் தாராள மனப்பான்மையைக் குறிக்கிறது. மூன்றாம் எண்ணை மூலமாகக் கொண்ட பெண்கள் புத்திசாலித்தனம், படைப்பாற்றல் மற்றும் சமூகத் தன்மை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் கணவர் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகிறார்கள். குடும்பத்தை ஒன்றாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். குருப கவானின் ஆசியுடன் திருமணத்திற்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படுகிறது. குடும்பத்தை வழிநடத்துவதில் முன்னிலை வகிப்பார்கள்.

45
ரேடிக்ஸ் எண் 5

ஒவ்வொரு மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ராசி எண் 5 ஆகும். இது புதன் கிரகத்துடன் தொடர்புடையது. புதன் பகவான் தகவல் தொடர்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் அதிபதியாவார். இந்த எண்ணை கொண்ட பெண்கள் புத்திசாலிகளாகவும், சமரசம் செய்வதில் திறமையானவர்களாகவும், சூழ்நிலைகளை திறமையாக கையாளக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் மாமியார் வீட்டில் உள்ள அனைவருடனும் உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். எந்த ஒரு சூழலையும் தங்களுடைய அறிவுத்திறமையால் சமநிலைப்படுத்துகிறார்கள். இது வீட்டிற்கு மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் அளிக்கிறது.

55
ரேடிக்ஸ் எண் 6

ஒவ்வொரு மாதத்திலும் 6,15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆறாம் எண்ணுடன் தொடர்புடையவர்கள். இந்த எண்ணை சுக்கிர பகவான் ஆள்கிறார். சுக்கிரன் அன்பு, அழகு மற்றும் செழிப்பின் கிரகமாவார். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் மிகவும் அன்பானவர்கள். மேலும் தங்கள் கணவர் வீட்டை அலங்கரிப்பதிலும், பராமரிப்பதிலும் திறமை பெற்று விளங்குகிறார்கள். அவர்கள் கணவர் வீட்டில் லட்சுமி தேவியின் உருவமாக கருதப்படுகிறார்கள். சுக்கிர பகவானின் ஆசியால் திருமணத்திற்குப் பின்னர் அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறுகிறது. புகுந்த வீட்டின் நிதி நிலைமை, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிக்கு தங்களால் முடிந்த பங்கை வழங்குகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories