சுக்கிரன் வீட்டில் புதன்.! இந்த ராசிகளுக்கு இனி குபேர யோகம் தான் - அதிர்ஷ்ட ராசிகளின் பட்டியல் இதோ.!

Published : Jan 06, 2026, 02:00 PM IST

புதன் பகவான் ஜனவரி 7, 2026 அன்று பூராட நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்க இருக்கிறார். புதன் பகவானின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
14
Budhan Peyarchi 2026

ஜோதிடத்தில் புதன் பகவான் கிரகங்களின் இளவரசனாக அறியப்படுகிறார். இவர் ஜனவரி 7ஆம் தேதி பூராட நட்சத்திரத்தில் நுழைய இருக்கிறார். பூராட நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரன் செல்வம், அழகு, காதல், ஆடம்பரம், ஆகியவற்றின் காரகராவார். புதன் பகவான் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், படிப்பு ஆகியவற்றின் காரகராவார். புதன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் நுழைவது வணிகம், வேலை, கல்வி மற்றும் நிதி விஷயங்களில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

24
மேஷம்

புதன் பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் செல்வத்தில் அதிகரிப்பை காண்பார்கள். உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும். புதிய முயற்சிகளை தொடங்குவதற்கான வேலைகள் நடைபெறும். புதிய திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். நிதி செழிப்பு அதிகரிக்கும். 

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்கள் பக்கம் இருக்கும். வெளிநாடு செல்லும் விருப்பம் நிறைவேறும். மன உறுதி அதிகரிக்கும். புதனின் செல்வாக்கு காரணமாக தொழிலில் மிகப்பெரிய மாற்றத்தைக் காணலாம். உங்கள் வணிகம் செழிக்கும். வணிகத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.

34
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் புதுமையால் நிறைந்திருக்கும். உறவுகளில் முன்னேற்றம் காணப்படும். வேலையில் நீங்கள் செய்த ஒரு குறிப்பிட்ட பணிக்காக அங்கீகரிக்கப்படுவீர்கள். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வுகளை அனுபவிக்கலாம். நீங்கள் முன்பு செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.

பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்கள் பக்கம் இருக்கும். வேலை மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை வலுப்பெறும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சாதகமான நேரமாகும்.

44
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடுமையான உடல் நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வணிகம் விரிவடையும். வணிகத்தில் புதிய திட்டங்களை தொடங்குவீர்கள். இந்த நேரத்தில் பணத்தை முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும். 

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி வருவதற்கான அறிகுறிகள் உள்ளது. முக்கியமாக உங்கள் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். குறைந்த ஊதியத்தில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கக்கூடும். புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். கௌரவம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories