Shani Uday 2026: முழு பலத்துடன் உதயமாகும் சனி பகவான்.! இந்த 3 ராசிகளுக்கு கொட்டி கொடுக்கப்போறாராம்.!

Published : Jan 06, 2026, 11:07 AM IST

Sani Peyarchi Palangal: அஸ்தமன நிலையில் இருக்கும் சனி பகவான் விரைவில் மீன ராசியில் உதயமாக இருக்கிறார். இது பல ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்களையும், வாழ்க்கையில் திருப்புமுனைகளையும் ஏற்படுத்த உள்ளது.

PREV
14
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்

2026 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் மீன ராசியில் முழுமையாக சஞ்சரிக்கிறார். மார்ச் 07, 2026 முதல் ஏப்ரல் 13, 2026 வரை சனி பகவான் சூரியனுக்கு மிக அருகில் செல்வதால் அஸ்தமன நிலையை அடைவார். ஏப்ரல் 14, 2026 அன்று மீன ராசியில் உதயமாகிறார். அதன் பின்னர் அவர் தனது முழுமையான சக்தியுடன் சுப பலன்களை வழங்கத் தொடங்குவார். மீனத்தில் சனி பகவான் உதயமாகும் போது சில ராசிகள் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அதுகுறித்து இங்கு காணலாம்.

24
ரிஷபம்

சனி பகவான் மீனத்தில் இருக்கும் போது மீன ராசிக்கு 11-வது இடமான லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இது உங்கள் வருமானத்தில் எதிர்பாராத அளவிற்கு நிதி அதிகரிப்புக்கு வழிவகுக்கும். தொழில் செய்து வருபவர்கள் கணிசமான லாபத்தை ஈட்ட புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு அல்லது போனஸ் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவும் புதிய நபர்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

34
மிதுனம்

மிதுன ராசிக்கு சனி பகவான் தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இது உங்கள் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளைத. திறக்கும். தொழிலில் ஸ்திரத்தன்மை மேலோங்கும். உங்கள் பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அதிகரிப்பீர்கள். வரவுக்கும் செலவுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவீர்கள். வேலை செய்து வருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் இழுபறியில் இருந்த பணிகளை விரைவாக முடிப்பீர்கள். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்களுக்கான வாய்ப்புகளும் உண்டு.

44
மகரம்

சனி பகவான் மகர ராசியின் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் உதயமாக இருக்கிறார். இது உங்கள் தைரியம், தன்னம்பிக்கை மற்றும் முயற்சிகளை அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைப் பெறும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி காண்பீர்கள். புதிய முயற்சிகளை தொடங்கவும் இது நல்ல நேரமாகும். புதிய வேலை, கடை அல்லது தொழிற்சாலை தொடங்க சாதகமான நேரமாகும். உங்கள் உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் ஒரு பெரிய முயற்சி நிறைவேறும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories